நாக்பூர் வன்முறை – ஊரடங்கு உத்தரவு அமுல் - 47 பேர் கைது

#India #Arrest #Violence
Prasu
1 week ago
நாக்பூர் வன்முறை – ஊரடங்கு உத்தரவு அமுல் - 47 பேர் கைது

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சம்பாஜி நகரில் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி இந்து அமைப்புகள் நடத்திய போராட்டத்திற்குப் பிறகு வன்முறைச் சம்பவங்கள் வெடித்தன.

47 கலவரக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏறத்தாழ 25 மோட்டார்சைக்கிள்களும் மூன்று கார்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

மேலும், நகரத்தின் மஹால் பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட பெரும் மோதலைத் தொடர்ந்து நாக்பூரின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

17ம் நூற்றாண்டைச் சேர்ந்த பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை தற்போது சத்ரபதி சம்பாஜிநகர் என்று அழைக்கப்படும் ஔரங்காபாத்தில் உள்ளது.

இந்தக் கல்லறையை அகற்றப் போவதாக இந்துத்துவா அமைப்புகள் அறிவித்ததைத் தொடர்ந்து அதற்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742369063.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!