போதைப்பொருள் குற்றச்சாட்டில் 4 கனேடியர்களை தூக்கிலிட்ட சீனா

#China #Canada #Prison #drugs #execute
Prasu
1 year ago
போதைப்பொருள் குற்றச்சாட்டில் 4 கனேடியர்களை தூக்கிலிட்ட சீனா

நான்கு கனடியர்கள் போதைப்பொருள் குற்றங்களுக்காக இந்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவால் தூக்கிலிடப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தக் கொலைகளை மீளமுடியாதவை மற்றும் அடிப்படை மனித கண்ணியத்திற்கு முரணானவை என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மரணதண்டனைகளைத் தவிர்ப்பதற்கான நானும் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கடந்த மாதங்களில் தலையிட்டு சீனாவிடம் கருணை கோரியதாக அமைச்சர் மெலானி ஜோலி கூறினார்.

அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் அரசு அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாக ஜோலி தெரிவித்தார். அதேவேளை கனடாவில் உள்ள சீனத் தூதரகம் சமீபத்திய மாதங்களில் சீனாவில் கனேடிய குடிமக்கள் தூக்கிலிடப்பட்டதை உறுதிப்படுத்தியது.

ஆனால் எத்தனை பேர் என்பதைக் கூற மறுத்துவிட்டது. போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மரணதண்டனைகள் விதிக்கப்பட்டதாகக் கூறியது. 

சீனாவின் சட்டத்தை மீறுபவர்கள் சட்டத்தின்படி பொறுப்பேற்க வேண்டும் என்று சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742454763.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4