இன்றைய ராசிபலன் (21.03.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன! (வீடியோ இணைப்பு )

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
16 hours ago
இன்றைய ராசிபலன் (21.03.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன! (வீடியோ இணைப்பு )


மேஷம்:
அசுவினி: சந்திராஷ்டமம் தொடர்வதால் செயல்களில் நிதானம் தேவை. வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.பரணி: சூழ்நிலையைப் புரிந்துகொண்டு செயல்பட நன்மை உண்டாகும். இயந்திரப்பணியில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கைத்தேவை.கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்பட உங்கள் முயற்சி வெற்றியாகும். உங்களால் ஆதாயம் அடைந்தவர்கள் தேடிவந்து உதவி செய்வர்.

ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: எண்ணியது நிறைவேறும். தொழில் லாபமடையும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நிலை உயரும்.ரோகிணி: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செயல்களில் இருந்த சங்கடம் நீங்கும். உங்கள் திறமை வெளிப்படும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.மிருகசீரிடம் 1,2: தடைபட்ட வேலை முடிவிற்கு வரும். பயணத்தால் லாபம் உண்டாகும். வரவு திருப்தி தரும். நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள்.

மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: எதிர்ப்பு விலகும். சொத்து விவகாரம் பற்றி பேசி தீர்வு காண்பீர். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் நாள்.திருவாதிரை: உடல் நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி விலகும். உங்களிடம் உதவி கேட்டு ஒரு சிலர் வருவர்.புனர்பூசம் 1,2,3: இழுபறியாக இருந்த விவகாரம் சாதகமாகும். எதிர்ப்பு விலகும். வியாபாரம் லாபமாகும். நினைத்ததை சாதிப்பீர்கள்.

கடகம்:
புனர்பூசம் 4: முயற்சியால் வெற்றி காணும் நாள். நீங்கள் ஈடுபடும் வேலையில் வெற்றி பெறுவீர். உங்கள் திறமையால் எதிர்பார்த்த ஒன்று நிறைவேறும்.பூசம்: பழைய பிரச்னை முடிவுக்கு வரும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். தொழில் எதிரிகள் விலகிச் செல்வர்.ஆயில்யம்: மனக்குழப்பம் விலகும். உங்கள் முயற்சி வெற்றியாகும். நம்பிக்கையோடு மேற்கொண்ட வேலை லாபம் அதிகரிக்கும்.


சிம்மம்:
மகம்: உழைப்பு அதிகரிக்கும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். உழைப்பிற்கேற்ற லாபம் உண்டாகும். பழைய கடன்களை அடைப்பீர்.பூரம்: உங்களைச் சுற்றி இருப்பவர்கள் பற்றி தெரிந்து கொள்வீர். அதிரடியாக ஒரு செயலில் இறங்குவீர். மனம் தெளிவடையும்.உத்திரம் 1: நினைத்ததை நினைத்தபடி நடத்துவீர். செல்வாக்கு அதிகரிக்கும் நாள். வியாபாரத்தை விரிவு செய்வதில் முனைப்பு காட்டுவீர்கள்.

கன்னி:
உத்திரம் 2,3,4: தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி காண்பீர். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். சமுதாயத்தில் அனுகூலம் உண்டாகும் நாள்.அஸ்தம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பக்குழப்பம் நீங்கும். துணிவுடன் செயல்படுவீர்கள்.சித்திரை 1,2: தொழிலில் போட்டியாக இருந்தவர்கள் விலகிச் செல்வர். உங்கள் முயற்சி லாபத்தை உண்டாக்கும். நிதிநிலை உயரும்.

துலாம்:
சித்திரை 3,4: வருவாயால் வளம்காணும் நாள். உங்கள் முயற்சியில் இருந்த தடை விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள்.சுவாதி: சிறிய முதலீட்டிலும் அதிக லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.விசாகம் 1,2,3: நீங்கள் எதிர்பார்த்த வருவாயை அடைவீர். புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டு வெற்றி காண்பீர்.கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.

விருச்சிகம்:
விசாகம் 4: தெளிவுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். நண்பர்களால் முயற்சி நிறைவேறும் நாள். அனுஷம்: அனைவரையும் அனுசரித்துச்செல்வீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். கேட்டை: வெளியூர் பயணத்தில் நெருக்கடிகள் ஏற்படும். மனம் குழப்பம் அடையும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.

தனுசு:
மூலம்: செலவு அதிகரிக்கும் நாள். மனக்குழப்பம் விலகும். இடம் பொருள் அறிந்து செயல்படுவீர். உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.பூராடம்: பணிபுரியும் இடத்தில் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வீர். ஒரு சிலருக்கு எதிர்பாராத செலவு தோன்றும்.உத்திராடம் 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். பிள்ளைகள் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.

மகரம்:
உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். மறைமுக எதிர்ப்பினை சமாளித்து வெற்றி அடைவீர். வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.திருவோணம்: எதிர்பார்த்த பணம் வரும். நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். புதிய நட்பால் விருப்பம் நிறைவேறும்.அவிட்டம் 1,2: நேற்றைய எண்ணம் பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். எதிர்பார்த்த தகவல் வரும்.

கும்பம்:
அவிட்டம் 3,4: நினைப்பது நடந்தேறும் நாள். வியாபாரத்தில் ஆதாய நிலை ஏற்படும். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர். எதிர்பார்த்த வரவுவரும்.சதயம்: எந்தவொரு வேலையையும் யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். அனைத்திலும் உங்கள் நேரடிப்பார்வை இருப்பது அவசியம்.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நிதிநிலை உயரும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும்.

மீனம்:
பூரட்டாதி 4: யோகமான நாள். உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். வழக்கமான செயல்கள் தடையில்லாமல் நடக்கும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.உத்திரட்டாதி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.ரேவதி: வேலைபளு அதிகரிக்கும். எதிர்பார்த்த வருவாய் வரும். உதவி புரிவதாக சொன்னவர்கள் தேடிவந்து உதவி செய்வர்.





லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை



images/content-image/1742508377.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!