தையிட்டி விகாரை போராட்டகாரர்களுக்கு அச்சுறுத்தல்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

#SriLanka #Jaffna #Lanka4 #Human Rights #Thaiyiddi
Mayoorikka
1 year ago
தையிட்டி விகாரை  போராட்டகாரர்களுக்கு  அச்சுறுத்தல்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு சிறிலங்கா பொலிஸாரினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் ஒன்றரை வருடத்தின் பின்னர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

 இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி 2023 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஜனநாயக ரீதியான போராட்டத்தின்போது பலாலி சிறிலங்கா காவல்துறையினரால் அராஜகமான அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டு சட்டவிரோத கைதுகள் இடம்பெற்றிருந்தது. 

 இதனையடுத்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ் பிராந்திய காரியாலயத்தில் எட்டுப் போரினால் சிறிலங்கா காவல்துறையினருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆயினும், காரணம் எதுவுமின்றி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை காரியாலயத்தால் குறித்த முறைப்பாட்டு கோவைகள் யாழ் பிராந்திய காரியாலயத்திலிருந்து கையேற்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விசாரணை எதுவும் நடைபெற்றிருக்கவில்லை.

 இந்நிலையில் ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு காரியாலயத்தில் இன்றைய நாள் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 கடந்த ஒன்றரை வருடங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்படாதிருந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடு குறித்து நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது இலங்கையின் மனித உரிமைகள் குறித்த விடயதானத்தில் உரையாற்றும் போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியிருந்த நிலையிலேயே இந்த விசாரணை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742478079.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4