சுவிட்சர்லாந்தில் இரவு ஒரு மணி நேரத்திற்கு அணைக்கப்படும் மின்விளக்குகள் - ஏன்?

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா உட்பட சில மாகாணங்கள், இன்று இரவு மணி 8.30 முதல் 9.30 வரை மின்விளக்குகளை அணைக்க அழைப்பு விடுத்துள்ளன.
இன்று, உலக நாடுகள் பல, புவி மணிநேரம் என்னும் Earth Hour என்னும் நிகழ்வை அனுசரிக்கின்றன. வன பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலின் மீது மனித தாக்கத்தைக் குறைகும் நோக்கில் செயல்படும், The World Wide Fund for Nature என்னும் சுவிஸ் அமைப்பு இந்த நிகழ்வை ஒழுங்குசெய்கிறது.
வழக்கமாக, மார்ச் மாதத்தின் இறுதி சனிக்கிழமை இந்த நிகழ்வு அனுசரிக்கப்படும். சில ஆண்டுகளில், கிறிஸ்தவர்களின் லெந்து காலம் அனுசரிக்கப்படும்பட்சத்தில், ஒரு வாரத்துக்கு முன்பே இந்த புவி மணிநேரம் அனுசரிக்கப்படுகிறது.
2007ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் துவங்கிய இந்த நிகழ்வு, தற்போது உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி, இன்று இரவு 8.30 முதல் 9.30 வரை மின்விளக்குகளை அணைக்க அழைப்பு விடுத்துள்ள சுவிஸ் மாகாணங்கள் சில, அதற்கு பதிலாக மெழுகுவர்த்திகளை பயன்படுத்த உள்ளன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



