இறந்த பெண் எழுந்து வந்த அதிசயம் - வைத்தியருக்கு விசாரணை

2023 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட பெண் ஒருவர் உயிரோடு வீடு திரும்பிய சம்பவம் ஒன்று இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
லலிதா பாய் என்ற பெண் கொலை செய்யப்பட்டதாகக் கூறி அவரது உடலை 2023 ஆம் ஆண்டு குடும்பத்தினர் அடக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில், லலிதா பாய் இப்போது உயிரோடு வீடு திரும்பியதால் அவரது உறவினர்களும், நண்பர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குறித்த பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை செய்த போது நபரொருவர் தன்னை 5 இலட்சத்திற்குச் செய்ததாகவும், தன்னை ராஜஸ்தான் மாநிலத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
2023 செப்டம்பரில் லலிதா பாய் காணாமல் போன போது பாரஊர்தி மோதியதில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அதனால் இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



