இன்றைய ராசிபலன் (23.03.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

மேஷம்;
அசுவினி: நன்மையான நாள்.
தடைபட்டிருந்த வேலைகள் இன்று நடந்தேறும். மற்றவரால் செய்யமுடியாத ஒரு செயலை
செய்து முடிப்பீர்கள்.பரணி: பெரியோர் ஆதரவால் உங்கள் வேலையில் வெற்றி
காண்பீர். எந்தவொரு செயலிலும் உங்களுடைய நேரடிப் பார்வை இன்று
அவசியம்.கார்த்திகை 1: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும்.
வருவாய் உயரும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் திருப்திதரும்.
ரிஷபம்;
கார்த்திகை
2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். பழைய பிரச்சினைகள் மீண்டும்
தலையெடுக்கும். உங்கள் வேலையில் குழப்பம் உண்டாகும். அக்கம் பக்கத்தினரால்
பிரச்சினைகள் தோன்றும்.ரோகிணி: எந்த ஒன்றிலும் நிதானமாக செயல்படுவது
அவசியம். பூமி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் நிதானம் தேவை. பிறரை
அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.மிருகசீரிடம் 1,2: வேலைபளு அதிகரிக்கும்.
பணிபுரியும் இடத்தில் பிரச்சினைகளை சந்திப்பீர். எதிர்பார்த்த வரவு
இழுபறியாகும். இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம்.
மிதுனம்:
மிருகசீரிடம்
3,4: நினைத்ததை சாதித்து முடிக்கும் நாள். உங்கள் வேலைகளுக்கு
குடும்பத்தினர் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.
எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.திருவாதிரை: வியாபாரத்தில் போட்டியாளரால்
ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். புதிய வாடிக்கையாளரால் வருவாய் அதிகரிக்கும்.
வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.புனர்பூசம் 1,2,3: இழுபறியாக இருந்த
பிரச்சினையில் இன்று உங்களுக்கு வெற்றியுண்டாகும். கூட்டுத்தொழிலில் இருந்த
சிக்கல்கள் விலகும். வருமானம் திருப்திதரும்.
கடகம்:
புனர்பூசம்
4: நினைப்பது நிறைவேறும் நாள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள்
விலகிச்செல்வர். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். உடல்நிலை
சீராகும்.பூசம்: கவனமுடன் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உங்கள்
எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நினைப்பதை நடத்தி முடிப்பீர். ஆயில்யம்:
புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுபட்டு லாபம் காண்பீர். போட்டியாளர்கள்
விலகுவர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும். ஒருசிலர்
ஆலய வழிபாட்டில் பங்கேற்பீர்.
சிம்மம்:
மகம்: நன்மையான நாள்.
உங்கள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட
பிரச்சினை முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும்.பூரம்: மனதில் இருந்த
குழப்பம் விலகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
செயல்களில் கூடுதல் கவனம் செலுத்துவது மேலும் நன்மையாகும்.உத்திரம் 1:
உங்கள் நீண்டநாள் முயற்சி இன்று நிறைவேறும். பயணத்தால் அனுகூலம் ஏற்படும்.
நிதிநிலை உயரும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.
கன்னி:
உத்திரம்
2,3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும்.
குடும்பத்திற்காக சேமிப்பை ஏற்படுத்துவீர். ஓய்வு எடுக்க நினைத்தாலும்
முடியாமல் போகும்.அஸ்தம்: வியாபாரத்தில் உங்கள் அனுகுமுறையால் லாபம்
உண்டாகும். முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும். கடன்களை
அடைப்பீர்.சித்திரை 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மனதில்
தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். தாய்வழி
உறவுகள் ஆதரவு கிடைக்கும்.
துலாம்:
சித்திரை 3,4: அதிர்ஷ்டமான
நாள். உங்கள் திறமை வெளிப்படும். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல்
வரும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும். சுவாதி: உடல்நிலை சீராகும்.
கவனமாக செயல்பட்டு, முடிவு செய்திருந்த வேலைகளை முடிப்பீர். எதிர்ப்புகள்
விலகும். சொத்து சிக்கல் முடிவிற்கு வரும்.விசாகம் 1,2,3: எதிர்பார்த்த
பணம் வரும். சிறு வியாபாரிகள் முயற்சி வெற்றியாகும். உங்களுக்கு எதிராக
செயல்பட்டவர்கள் பலமிழப்பர். நீங்கள் நினைப்பது நடந்தேறும்.
விருச்சிகம்:
விசாகம்
4: யோகமான நாள். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாள்வீர். உங்கள்
முயற்சி வெற்றியாகும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். வருமானம் உயரும்.அனுஷம்:
சொத்து வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும். சூழ்நிலையை
அறிந்து செயல்பட்டு லாபம் காண்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி
நீங்கும்.கேட்டை: வியாபாரத்தை விரிவு செய்வதில் கவனம் செல்லும். வெளி
வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தேவைகள் பூர்த்தியாகும்.
தனுசு:
மூலம்:
வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். இழுபறியாக இருந்த ஒரு வேலை
இன்று நிறைவேறும். வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம்
அடைவீர்.பூராடம்: ஒரு சிலர் குழப்பத்திற்கு ஆளாவீர். எந்த ஒன்றிலும்
கையெழுத்திடும்முன் படித்துப்பார்ப்பது நன்மையாகும். புதிய முயற்சிகள்
இன்று வேண்டாம்.உத்திராடம் 1: வருமானத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும்
முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
வாழ்க்கைத்துணையின் ஆதரவால் உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.
மகரம்:
உத்திராடம்
2,3,4: லாபமான நாள். தடைப்பட்ட வேலைகள் நடந்தேறும். உங்கள் திறமை
வெளிப்படும். காணாமல் போன பொருள் கைக்கு கிடைக்கும். செலவில் கவனம்
தேவை.திருவோணம்: உறவினர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். எதிர்பார்த்த
வரவு இழுபறியாகும். அலைச்சலால் சோர்வு அடைவீர். மனம்
குழப்பமடையும்.அவிட்டம் 1,2: உழைப்பு அதிகரிக்கும். எந்த ஒன்றிலும்
திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும். வாகனத்தால் செலவு தோன்றும்.
செலவிற்கேற்ற வரவு வரும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: லாபமான நாள்.
நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்குவரும். வியாரம்
முன்னேற்றமடையும். நிதிநிலை உயரும்.சதயம்: வியாபாரத்தில் உங்கள்
எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் வருமானம்
அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு வெளிப்படும். பூரட்டாதி 1,2,3:
முயற்சியில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்
நீங்கும். வரவேண்டிய பணம் வரும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.
மீனம்:
பூரட்டாதி
4: எண்ணியது நடந்தேறும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீங்கள்
எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். பணப்புழக்கம்
அதிகரிக்கும்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள்
செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த தகவல்வரும்.ரேவதி: உங்கள் செயலில் ஆதாயம்
தோன்றும். குடும்பத்தினர் ஆதரவால் தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வியாபாரத்தை
விரிவு செய்வது பற்றி ஆலோசனை மேற்கொள்வீர்
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



