மருத்துவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் குறித்த பிரச்சினைக்கு தீர்வு!
#SriLanka
#world_news
#doctor
#lanka4news
#Lanka4indianews
Dhushanthini K
1 day ago

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், கூடுதல் பணிகளுக்காக மருத்துவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாக, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், கடந்த காலங்களில் நாட்டில் பட்ஜெட் திட்டங்கள் மூலம் சுகாதாரத் துறை கொடுப்பனவுகள் குறைக்கப்படும் என்று தீவிரமான பேச்சு எழுந்துள்ளது.
சில சுகாதார நிபுணர் சங்கங்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன, இதற்கு நேர்மறையான பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன” எனவும் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



