விஜய் சேதுபதியின் சோகக் கதை ! முதல் பட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிரபல நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் ஆரம்பநாட்களில் அவர் துணை நடிகராக இருந்தார். அவருக்கு இயக்குனர் ஜெயம் ராஜா கொடுத்த முதல் சம்பளம் குறித்து தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் சில நடிகர்களின் வளர்ச்சி ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும். அப்படி ஒரு நடிகராக இருப்பவர் தான் விஜய் சேதுபதி. அவர் கூத்துப்பட்டறையில் கணக்காளராக இருந்து பின்னர் நடிப்பில் தன் கவனத்தினை திருப்பினார்.
நிறைய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தும் இருக்கிறார். அப்படி தொடங்கிய அவர் வாழ்க்கை தென்மேற்கு பருவ காற்று படம் மூலம் வேறு அவதாரம் எடுத்தது. தொடர்ச்சியாக வாய்ப்புகள் குவிந்தது. பிட்சா படம் மூலம் தனக்கென ஒரு அங்கீகாரத்தினை பெற்றார்.
தமிழ் சினிமாவில் பெரிய நோக்கம் இல்லாமல் நடிப்பது என் தொழில் என பல இடங்களில் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார். தனக்கு வந்த எல்லா வாய்ப்பையுமே ஒப்புக்கொண்டார்.
ஒரு வருடத்தில் ஐந்து அல்லது ஆறு படங்கள் வரை நடித்தவர். ஆனால் இதை தொடர்ந்து அவருக்கு நிறைய வில்லன் வாய்ப்புகளும் வர அதை ஒப்புக்கொண்டார். இதனால் அவருடைய ஹீரோ இமேஜ் பாதிக்கப்பட்டு அந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாமல் போனது.
இதை தொடர்ந்து அவர் நடிப்பில் எல்லாமே தோல்வி படங்களாக மாறியது. இந்நிலையில் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் அவரின் 50வது திரைப்படமான மகாராஜா மிகப்பெரிய வெற்றி படமாக மாறி ஆச்சரியப்படுத்தியது. திரையரங்கை விட ஓடிடியில் மிகப்பெரிய சூப்பர்ஹிட் அடித்தது. தமிழ் படம் ஒன்று பல ஆண்டுகள் கழித்து சீனா வரை வெளியிடப்பட்டு அசத்தியது.
தற்போது மீண்டும் விஜய் சேதுபதியின் கேரியர் உச்சம் பெற்றுள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதி அங்கீகாரப்படாத ஒரு துணை கதாபாத்திரமாக எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் நடித்திருக்கிறார். இதுகுறித்து பல தகவல்கள் வந்தது.
தற்போது அதுகுறித்து பேசி இருக்கும் ஜெயம் ராஜா, அவர் என்னிடம் ஒருமுறை பேசும் போது நீங்க எனக்கு முதல் சம்பளமாக 750 ரூபாய் கொடுத்தீங்க சார். ஆனால் எனக்கு அது அப்போது பெரிய உதவியாக இருந்தது.
அதுபோல அங்கிருந்த எங்களிடம் இது ரொம்ப சின்ன ரோல் தான் என்ற உண்மையை சொன்னீங்க. பெரும்பாலும் எந்த இயக்குனருமே அப்போது அப்படி சொல்லியதும் இல்லை எனத் தெரிவித்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



