நாணய நிதியத்தின் தேவைக்கமையவே இவ்வாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம்! நாமல்

#SriLanka #Namal Rajapaksha #IMF #budget
Mayoorikka
1 year ago
நாணய நிதியத்தின் தேவைக்கமையவே இவ்வாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம்! நாமல்

சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கமையவே இவ்வாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் நாட்டிலுள்ள எந்தவொரு பிரதான பிரச்சினைக்கும் அதில் தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 அம்பாந்தோட்டை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர், மேலும் குறிப்பிடுகையில்,

 வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிராகவே நாம் வாக்களித்தோம். அதிலுள்ள வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது நடைமுறைச் சாத்தியமானதா என்பது சந்தேகத்துக்கிடமானது. வரி வருமானம் மற்றும் கடன் பெறுவதைத் தவிர அரசிடம் வேறு எந்த மாற்றுத்திட்டமும் இல்லை.

 தொழில் வாய்ப்பின்மை உட்பட நாட்டிலுள்ள எந்தவொரு பிரதான பிரச்சினைக்கும் இந்த வரவு - செலவுத் திட்டத்தில் தீர்வு முன்வைக்கப்படவில்லை. மாறாக முற்று முழுதாக சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கமையவே இந்த வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. 

 அரச நிர்வாகம் தொடர்பில் அரசு இன்னும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். அரசிலுள்ள அமைச்சர்களுக்கு நாடாளுமன்றத்துக்குள் பொய் கூறும் உரிமை நீக்கப்பட வேண்டும். கிராம மட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிக வேகமாகப் பலமடைந்து வருகின்றது.

 உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஊடாக மீண்டும் கட்சியை உயர் நிலைக்குக் கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என்றார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742765884.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4