அமெரிக்க தூதரகம் தாக்குதல் வதந்தி! சந்தேக நபருக்கு விளக்கமறியல்

#SriLanka #Attack #Lanka4 #United States Ambassador to Sri Lanka #US President
Mayoorikka
1 week ago
அமெரிக்க தூதரகம் தாக்குதல் வதந்தி! சந்தேக நபருக்கு விளக்கமறியல்

அமெரிக்க தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகள்மீது அடிப்படைவாத பயங்கரவாதிகள் குழுவொன்று தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பிரசாரம் மேற்கொண்ட நபர் ஒருவர், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்ட பத்தரமுல்லைச் சேர்ந்த குறித்த நபர் நேற்று (24) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

 சந்தேகநபர் சமூக ஊடகங்களில் தவறான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 இந்தநிலையில், சந்தேகநபருக்கு மனநல பிரச்சினை உள்ளதா என்பதைக் கண்டறிய மனநல மருத்துவ அறிக்கையைக் கோருவதற்கான விசாரணை அதிகாரிகளின் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742765884.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!