மக்களிடம் அர்ச்சுனாவின் அன்பான வேண்டுகோள்!

#SriLanka #Gajendrakumar Ponnambalam #Lanka4 #Archuna
Mayoorikka
3 days ago
மக்களிடம் அர்ச்சுனாவின் அன்பான வேண்டுகோள்!

யாழ் மாவட்டத்தினை அபிவிருத்தி செய்வதாக கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக பெருமளவான நிதியினை விரையப்படுத்தி த கிரேட்டர் ஜாப்னா என்று சொல்லப்படுகின்ற ஒரு திட்டத்தினை யாழ் நகரத் திட்டமிடல் பிரிவு ஒன்று கொழும்பிலிருந்து தெளிவாக ஆங்கிலமோ அல்லது தமிழோ பேசத் தெரியாத தேசிய மக்கள் சக்தியின் அடிவருடி ஒருவரினை கடந்த யாழ் டிசிசி மீட்டிங்கு கூட்டிக் கொண்டு வந்து தமிழ் மக்களுக்கு ஒரு பொய்யான தேர்தல் அபிவிருத்தி வாக்குறுதி ஒன்றினை வழங்குவதற்காக முயன்ற சம்பவம் உங்களுக்கு தெரியும். 

 சில விடயங்களை நான் பொதுமக்களுக்கு எழுத்து மூலம் தெளிவாக விளங்கப்படுத்த விரும்புகிறேன். தயவு செய்து முழுமையாக படித்துவிட்டு என் கருத்துக்கு உடன்படுவீர்களானால் பகிர்ந்து கொள்ளவும் சாதாரணமாக ஒரு பிரதேசம் ஒன்றினை அபிவிருத்தி செய்யும்போது நகர திட்டமிடல் பிரிவு ஒரு மாஸ்டர் பிளான் ஒன்றினை தயாரிக்கும்.

 அவ்வாறான தயாரிப்பு ஒன்றினை மேற்கொண்டு ஒரு புரொஜெக்ட் ஒன்றினை நாங்கள் வரைவு செய்வதற்கும் அதனை முடிப்பதற்கு இடையில் 5 பகுதிகளாக தத்துவார்த்த ரீதியாக பிரிக்கலாம். 

 1. Initiation திட்டத்தினை ஆரம்பித்தல்

 2. Planning திட்டத்தினை வரைவு செய்தல்

 3. Execution திட்டத்தினை செயல்படுத்துதல்

 4. Monitoring and Evaluation திட்டத்தினை மேற்பார்வை செய்தலும் திட்ட முன்னேற்றத்தை அளவீடு செய்தலும்

 5. Closure திட்டம் முடிக்கப்பட்டு வெற்றிகரமாக பூர்த்தி செய்தல் இதிலே முதல் படி மிகவும் முக்கியமானதாகும். 

 இந்த இனிஷியேஷன் அல்லது திட்டத்தினை ஆரம்பித்தல் பகுதியில் ஒரு புரொஜெக்ட் அல்லது திட்டம் ஒன்றிற்கு அதன் கருப்பொருளை பொதுமக்களுக்கு விளங்கப்படுத்தி அந்தக் கருப்பொருளை பொதுமக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா இல்லையா அதன் பாதிப்புகள் என்ன என்பதை பற்றி முழுமையாக ஆராய்ந்து ஒரு முடிவான திட்ட வரை ஒன்றை ஆரம்பிப்பார்கள் இதை ஆங்கிலத்திலே பிசினஸ் கேஸ் பிசினஸ் சார்ட்டர் என்று சொல்வார்கள்.

 இவ்வாறான திட்ட வரை போன்ற ஆரம்பிக்கும் போது பல தரப்பட்ட இந்த திட்டத்திற்கு சம்பந்தமான ஸ்டேட் ஹோல்டர்ஸ் என்று சொல்லப்படுகின்ற பங்குதாரர்களை இந்த கூட்டத்திற்கு அழைப்பது முறைமை. அந்தப் பங்குதாரர்களாக அரசாங்கமும் அரசாங்க ஊழியர்களும் தனியார் துறையும் அது தவிர பாராளுமன்ற உறுப்பினர்களும் அது தவிர பொதுமக்களும் அழைக்கப்பட வேண்டியது மிக முக்கியம்.

 கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளாக இந்த திட்டங்கள் வரைவு செய்யப்பட்ட போதும் இவை பற்றிய எந்த ஒரு அறிவித்தலும் பொது மக்களுக்கு அல்லது பொது மக்களின் பிரதிநிதி ஒருவருக்கோ அனுப்பப்படவில்லை தான்தோன்றித்தனமாக இனிஷியேஷன் எனப்படுகின்ற அந்தத் திட்டத்தின் ஆரம்பத்தை 2021 ஆம் ஆண்டு அதற்கு முற்பட்ட ஆண்டுகளில் இருந்து நகர திட்டமிடல் பிரிவு செய்து வந்திருந்தது அதன் பின்னர் அதனுடைய இரண்டாம் கட்டம் பிளானிங் அந்த இரண்டாம் கட்டத்தின் போது இந்த செயல் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுமா பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுமா? 

பொதுமக்கள் அதற்கு தயாராக இருக்கிறார்களா? இவ்வாறான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டு நாள் கணக்காக மணித்தியாலங்களாக மாதக்கணக்காக இந்த திட்டமிடல் மேம்படுத்தப்பட்டு பிளானிங் முடிவுறுத்தப்படும் அதன்பின்னராகவே ஒரு திட்டத்தின் பிளான் என்பதை வரையறை செய்ய முடியும்.

 எந்தப் பொதுமகனுக்காவது இதுவரை யாழ்ப்பாணத்திலே த கிரேட்டர் ஜப்னா ப்ரொஜெக்ட் எனப்படுகின்ற திட்டவரை ஒன்றை இவர்கள் மில்லியன் கணக்கான பணத்தை செலவழித்து செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியுமா? பாராளுமன்ற உறுப்பினராக நான் வந்து ஆறு மாதம் இது தொடர்பாக எந்த அறிவுறுத்தல்களோ எந்த முன்மொழிவுகளோ பத்திரிகையாளர் கூட இதுவரை எழுதியதும் இல்லை பத்திரிகைகளில் வந்ததும் இல்லை இவை எல்லாவற்றிற்கும் ஆரம்பமாக முக்கியமாக இனிஷியேஷன் என்று சொல்லப்படுகின்ற முதலாம் கட்டத்திலேயே இவ்வாறான ஒரு ப்ராஜெக்ட் ஒன்றை நாங்கள் கருத்தாக்கம் செய்யும்போது அவற்றுக்கான நிதி மூலத்தை கட்டாயம் தேட வேண்டும் 

 பொதுமக்களை ஏமாற்றுவதற்காக த கிரேட் ஆஃப் ப்ரொஜெக்ட் எனப்படுகின்ற இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு முன்னர் இதற்கு காசு இருக்கிறதா இதற்குரிய செலவினங்கள் எங்கிருந்து புறப்படப் போகின்றது என்பதை தீர்மானித்து விட்டு தான் இந்த திட்டத்தை ஆரம்பிக்க முடியும் அதனால் தான் கேட்டேன் இந்த பத்து வருட திட்டத்திற்கு உங்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது எங்கே இருந்து நீங்கள் இந்த பண மூலத்தை திரட்ட போகிறீர்கள் உங்களுக்கு இது சம்பந்தமான ஏதாவது பதில் இருக்கிறதா என்று கேட்டேன்? அந்தப் பதிலை கேட்டபோது சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அது சம்பந்தமான அறிவு இல்லை!

 அவர் கொழும்பிலிருந்து கூட்டிக் கொண்டு வந்த ஒரு அடி முட்டாள் அரசு அதிகாரிக்கும் அது சம்பந்தமாக பதில் சொல்ல தெரியவில்லை! இவ்வாறான திட்டங்கள் யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்தப்படுமானால் யாழ்ப்பாணம் ஒரு சிங்கப்பூர் ஆக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் இவை எல்லாம் தேர்தல் நேரத்தில் செய்யப்படுகின்ற சுற்று மாத்து சித்து விளையாட்டுகளே! இவற்றையெல்லாம் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இதுவரை யாருமே எதிர்த்து கேள்வி கேட்டதும் இல்லை! விரயம் செய்யப்படுகின்ற பணம் தொடர்பாக யாரும் கரிசனை கொள்வதுமில்லை! 

 பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்களுக்கு இவற்றையெல்லாம் விளங்கிக் கொள்ளும் அளவிற்கு பொது அறிவு கூட இல்லை அல்லது அவரோடு சேர்ந்து இருப்பவர்கள் யாரிடமாவது கேட்டு இவற்றைப் பற்றி அறிந்து கொண்டு வந்து இவ்வாறான பிரதேச ஒருங்கமைப்பு கூட்டங்களிலே உட்காரலாம். அது தவிரவும் எனது இடப்பக்கத்தில் இருந்து என்னை வெளியேற்றுமாறு சைகை காட்டிய வயோதிபர் சீனி ஐயா அவர்கள் இவ்வாறானவற்றை கிரகித்துக் கொள்ளக்கூடிய வயதிலும் இல்லை பக்குவத்திலும் இல்லை படிப்பறிவிலும் இல்லை ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வருகின்ற போது தங்களால் விளங்கிக் கொள்ள முடியாத விடயங்களில் முக்கியமாக பருத்தித் துறை டிசிசி மீட்டிங்கிலே ஒரு இன்ஜினியர் அதுவும் எலக்ட்ரிக் இன்ஜினியர் சில விடயங்களை சொன்ன போது அவற்றை என்னால் கூட விளங்கிக் கொள்ள முடியவில்லை முக்கியமாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவன் அவர்களும் ஒத்துக்கொண்டார் இருவருக்கும் விளங்கவில்லை என்று. ஆதலால் அந்த இன்ஜினியர் அவர்களிடம் பவுயமாக கதைத்து அவரிடம் இருந்து தெளிவான அறிவூட்டல்களை இருவருமே பெற்றுக் கொண்டோம். 

 அதேபோல் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்கள் கூட அந்த சந்தர்ப்பத்திலே விளங்காதவற்றை தெரியாது என்று சொல்லி கேட்டுக்கொண்டிருக்கலாம் அதை விடுத்து அரசு அதிகாரிகளை கேள்வி கேட்கிறோம் அவமானப்படுத்துகிறோம் என்று சொல்லி வேட்டியை மடித்துக் கொண்டு வெளியே செல்வது என்பது மொத்த தமிழ் இனத்துக்கும் அவமானம் இவர்கள் இதுவரை செய்த அரசியல் புட்டுக்களை கதைப்பதும் கத்தரிக்காய் கதைகளை கதைப்பதும் நெற்றி முழுவதும் விபூதி பூசிக்கொண்டு பொய்யான சமய நம்பிக்கைகள் உள்ளவர்கள் போல் வாக்குகளை பெற்றுக் கொள்வதுமே இதுவரை செய்த வரலாறு 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் எமது இனம் செத்து கிடந்த போது இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகத்தான் இருந்தார்கள் 

 அதன் பின்பு கூட 2014 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன் வடக்கு மாகாண சபை இவர்களிடம் கொடுக்கப்பட்ட போது இவர்கள் அதை சின்னா பின்னப்படுத்தி ஒதுக்கப்பட்ட முழு நிதியை கூட மீண்டும் அனுப்பியிருந்தார்கள் இந்த நிமிடங்களிலே நான் சொல்லிக் கொள்ள விரும்புவது எங்களால் விளங்கிக் கொள்ள முடியாத பாடப்பரப்பில் உள்ள ஏதாவது ஒரு விடயம் ஒன்றை நாங்கள் விவாதிக்க வேண்டுமாக இருந்தால் அவை சம்பந்தமாக அறிவு உள்ள அரசாங்க ஊழியர்களை எமது வலது கைகளாக வைத்திருக்க வேண்டும் அதுதான் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு அழகு. 

 இதுவரை காலமும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுபவர்களின் தராதரங்களை நாங்கள் நினைத்துக் கூட பார்த்ததில்லை ஏனெனில் அவர்கள் தங்களுடன் சேர்த்து செயலாளர்களாக சற்று அறிவுள்ளவர்களை வைத்துக் கொண்டிருப்பார்கள் என்ற நம்பிக்கை. ஆனால் அன்றைய தினம் சீனி ஐயாவோ அல்லது எழும்பி வெளியே சென்றவரோ எந்த ஒரு அடிப்படை அறிவும் இல்லாமல் அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டது மிகவும் கீழ்த்தரமானதாகவும் கவலைக்குரியதாக நான் கருதுகிறேன் பொதுமக்களின் தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் பொது மக்களின் எதிர்காலம் பற்றி சிந்தித்து நடக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆனால் அன்றைய தினத்தில் அமைச்சரோ அல்லது அதற்கு பொறுப்பாக இருந்த அரசு அதிகாரிகளோ இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குரிய சாத்திய கூறுகள் பற்றி கதைக்கும் போது தனிப்பட்ட சிறுபிள்ளைத்தனமான முட்டாள்தனமான கதைகளை கதைத்து கேவலமான வார்த்தைகளால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை திட்டியது மட்டுமல்லாமல் கூட்டத்தை இடைநிறுத்தி வெளியே சென்றிருந்தார்கள் இதுதான் தமிழரின் தலைவிதி என்றால் நம் தலைகளை அடித்துக் கொள்வதை விட வேறொன்றுமில்லை 

 தமிழ் மக்களே சற்று சிந்தியுங்கள் உள்ளூர் ஆட்சி தேர்தல் உங்களுக்கு ஒரு மீண்டும் தெளிவான சந்தர்ப்பம் இந்த உள்ளூர் ஆட்சி தேர்தலிலே அறிவற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை தன்னகத்தைக் கொண்டிருக்கின்ற அரசாங்கக் காட்சிகளையோ அல்லது தமிழரின் தேசிய பிரச்சனையை வைத்து அரசியல் விபச்சாரம் செய்கின்ற தமிழ் கட்சிகளையோ நீங்கள் புறம் தள்ளி தற்போதைய நிலைமையில் தமிழ் மக்களுக்காக போராடி ஒரு அபிவிருத்தியை பெற்றுக் கொடுக்கக்கூடிய தலைவர்களை தேர்ந்தெடுங்கள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் கூட்டுக் கட்சி பகுதியளவில் தமிழருக்காக சிங்கள பேரினவாத அரசுகளுடன் வாதிட்டோ போரிட்டோ அபிவிருத்தியை செய்யும் என்பது அடியேனின் அபிப்பிராயம் 

 அவ்வாறான பொதுக் கொள்கைக்காக ஒரு பாராளுமன்ற உறுப்பினராக பொதுமக்களுடன் கேட்டுக் கொள்வது நான் போட்டியிடாத பருத்தித் துறை தவிற அனைத்து யாழ்ப்பாணம் முக்கியமாக சொல்கிறேன் யாழ்ப்பாண உள்ளூராட்சி சபை தேர்தலில் நீங்கள் ஒரு வாக்கு கூட என் பி பி அரசாங்கத்திற்கோ அல்லது தமிழரசு கட்சிக்கோ மறந்தும் அழித்துவிடக்கூடாது என்பது அது எமது தமிழ் மக்களின் எதிர்காலத்தை சூனிய புள்ளி ஒன்றில் இலகு வாக உட்கொண்டு செல்லும் சற்று சிந்தித்து வாக்களியுங்கள்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742765884.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!