பிரான்சிற்கு வருகை தரும் லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன்

லெபனான் நாட்டின் ஜனாதிபதி ஜோசஃப் அவுன் அவர்கள் இன்று மார்ச் 28, வெள்ளிக்கிழமை பரிசுக்கு வருகை தர உள்ளார்.
ஜோசஃப் அவுன் கடந்த ஜனவரியில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்னர் அவர் மேற்கு நாடு ஒன்றுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.
பிரான்ஸ்-லெபனான் நட்பை பாராட்டவும், லெபனானின் இறையாண்மையை பாதுகாக்கவும் இந்த சந்திப்பு அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
”லெபனான் மக்கள் எப்போதும் பிரான்ஸ் தங்கள் பாதுகாப்புத்தாய் என்ற வலுவான எண்ணத்தோடு வளர்க்கப்பட்டுள்ளனர்” என சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி ஜோசஃப் அவுன் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.
லெபனான் பலத்த பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் லெபனான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
லெபனான் அரசாங்கத்தை மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியத்துடன் பிரான்சும் இணைந்துகொள்ளும் என நம்புவதாக அவர் தெரிவித்திருந்தார்.



