17 ஆண்டுக்கு பின் சென்னை அணியை வீழ்த்திய பெங்களூரு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட், விராட் கோலி களமிறங்கினர். சால்ட் 16 பந்துகளில் 32 ரன்களில் அவுட் ஆனார். கோலி 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த படிகல் 27 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது.
197 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவிந்திரா, ராகுல் திரிபாதி களமிறங்கினர். திரிபாதி 5 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த கேப்டன் ருதுராஜ் கெய்குவாட் ரன் எதுவும் எடுக்காமல் (0 ரன்) அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இறுதியில் சென்னை 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.
டோனி 16 பந்துகளில் 30 ரன்களுடனும், நூர் அகமது ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்சை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றிபெற்றது.
பெங்களூரு தரப்பில் அந்த அணியின் ஹேசில்வுட் அதிகபட்சமாக 4 ஓவரில் 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தயால், லிவிங்ஸ்டன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



