இன்றைய ராசிபலன் (29.03.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

மேஷம்:
அசுவினி: நிதானமாக செயல்பட வேண்டிய
நாள். வேலையின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத
செலவும், பண நெருக்கடியும் ஏற்படும்.பரணி: திட்டமிட்டு செயல்படுவதால்
நேற்றைய முயற்சி நிறைவேறும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
எதிர்ப்புகள் விலகும்.கார்த்திகை 1: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு
விலகும். வரவு செலவில் கவனம் தேவை. இன்று யாருக்கும் கடன் கொடுக்க
வேண்டாம்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: யோகமான நாள். உங்கள்
முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். நினைத்த வேலை எளிதாக
நடக்கும். ரோகிணி: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அலுவலகத்தில்
ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் லாபம்
காண்பீர்.மிருகசீரிடம் 1,2: நெருக்கடி விலகும் நாள். எதிர்பார்த்த தகவல்
வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி
உண்டாகும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள்.
வியாபாரத் தடை விலகும். வேலைத் தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.
வெளியூர் பயணம் லாபம் தரும்.திருவாதிரை: உங்கள் வேலை எளிதாக நிறைவேறும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றியாகும். கோயில்
வழிபாட்டில் பங்கேற்பீர்.புனர்பூசம் 1,2,3: உத்தியோகத்தில் ஏற்பட்ட
பிரச்னைகளை சரி செய்வீர். நேற்று இழுபறியாக இருந்த வேலை இன்று நடக்கும்.
கடகம்:
புனர்பூசம்
4: வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பெரியோர் ஆதரவால் வேலை எளிதாக
முடியும். குடும்பத்தினர் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்.பூசம்: ஒரு
சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர். இழுபறியாக இருந்த பிரச்னை
முடிவிற்கு வரும். பண வரவு அதிகரிக்கும். வெளியூர் பயணம்
மேற்கொள்வீர்.ஆயில்யம்: வியாபாரத்தில் மாற்றம் செய்வது குறித்து
ஆலோசிப்பீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த
அனுமதி கிடைக்கும்.
சிம்மம்:
மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய
நாள். உங்களுக்குண்டான எதிர்ப்பு குறையும். புதிய முயற்சியை ஒத்தி வைப்பது
நல்லது. ஒவ்வொன்றையும் யோசித்து செயல்படவும்.பூரம்: திட்டமிட்ட வேலைகளை
ஒத்தி வைப்பீர். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது
நல்லது. வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.உத்திரம் 1: வேலைபளு
அதிகரிக்கும். பிறர் செயல் உங்களை சங்கடப்படுத்தும். வாகனப் பயணத்தில்,
இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம்.
கன்னி:
உத்திரம் 2,3,4:
நன்மையான நாள். நிதானித்து செயல்படுவதால் உங்கள் வேலை எதிர்பார்த்தபடி
நடந்தேறும். புதிய முயற்சி வெற்றியாகும்.அஸ்தம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை
விலகும். குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் உங்கள் செயல் நிறைவேறும். லாபம்
அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும்.சித்திரை 1,2: நண்பர்கள் ஆதரவுடன் வேலைகளை
நடத்தி முடிப்பீர். சிறு வியாபாரிகளுக்கு வருமானம் உயரும். இழுபறியாக
இருந்த வேலை நடக்கும்.
துலாம்:
சித்திரை 3,4: முன்னேற்றமான
நாள். தொழில் போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும் வியாபாரத்தில்
எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உடல்நிலை சீராகும்.சுவாதி: நீங்கள்
மேற்கொள்ளும் முயற்சி இன்று வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலை
முடிவிற்கு வரும்.விசாகம் 1,2,3: பொது சேவையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு
மதிப்புண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உங்கள்
செல்வாக்கு உயரும் நாள்.
விருச்சிகம்:
விசாகம் 4: நன்மையான
நாள். சிந்தித்து செயல்பட்டு லாபமடைவீர். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி
நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.அனுஷம்: கோயில் வழிபாட்டால் மனம்
தெளிவடையும். உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட
பிரச்னை நீங்கும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர். உங்கள் விருப்பம்
எளிதாக நிறைவேறும்.
தனுசு:
மூலம்: உழைப்பு அதிகரிக்கும் நாள்.
உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக்கொள்ள கடுமையாக உழைப்பீர். இறை
வழிபாட்டில் மனம் செல்லும்.பூராடம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை
தீரும். நண்பர்கள் ஆதரவுடன் நினைத்ததை அடைவீர். வரவேண்டிய பணம்
வரும்.உத்திராடம் 1: தாய்வழி உறவினர் ஆதரவுடன் உங்கள் வேலை நடக்கும்.
வருமானத்தில் இருந்த தடை விலகும். புதிய பொருட்கள் வாங்குவீர்.
மகரம்:
உத்திராடம்
2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். துணிச்சலுடன் செயல்படுவீர். நீங்கள்
மேற்கொள்ளும் வேலைகள் வெற்றியாகும்.திருவோணம்: உங்கள் திறமை வெளிப்படும்.
ஒரு சிலர் புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர். நேற்றைய பிரச்னை
முடிவிற்கு வரும்.அவிட்டம் 1,2: சகோதரர்கள் உதவியுடன் வேலைகள் நடக்கும்.
எதிர்பார்த்த பணம் வரும். குரு பார்வை படுவதால் முயற்சி வெற்றியாகும்.
கும்பம்:
அவிட்டம்
3,4: லாபமான நாள். உங்கள் செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். எடுக்கும்
முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.சதயம்:
சுறுசுறுப்புடன் செயல்படுவீர். திட்டமிட்ட வேலை திட்டமிட்டபடி நடக்கும்.
வரவேண்டிய பணம் வரும்.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். பழைய கடன்களை
அடைப்பீர்.
மீனம்:
பூரட்டாதி 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய
நாள். மனக்குழப்பம் விலகும். செயல்களில் லாபம் ஏற்படும். ஒரு சிலர்
வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.உத்திரட்டாதி: வேலை செய்யும் இடத்தில்
எதிர்பாராத பிரச்னைகளை சந்திப்பீர். மனம் குழப்பமடையும். அமைதி காப்பது
நல்லது.ரேவதி: உங்கள் முயற்சியில் கவனமாக இருப்பது அவசியம். தேவையற்ற
பிரச்னை தோன்றும். சுயவேலையில் மட்டும் கவனம் தேவை.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



