சுவிற்சர்லாந்தில் நடைபெறும் நூல் அறிமுக விழாவும் வாசிப்பு மாலையும்

நூல் அறிமுக விழாவும் வாசிப்பு மாலையும்
காலம் வனைந்த கலயங்கள்
04. 05. 2025 ஞாயிறு / 16.00 மணிமுதல்
Einladung zur Buchvernissage & Leseabend
"Die von der Zeit gemalten Gefässe"
Europaplatz 1B, 3008 Bern
அன்பு இலக்கிய உள்ளங்களே வணக்கம்
மிக்க
மகிழ்ச்சியுடன், உங்கள் அனைவரையும் நூல் அறிமுக விழாவிற்கும், சிறப்பு
வாசிப்பு மாலைக்கும் இத்தால் அழைக்கிறோம். தாயகத்து எழுத்தாளர் திருமதி.
ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் எழுதி ஜீவநதி (இலங்கை) பதிப்பகம் வெளியிட்ட
«காலம் வனைந்த கலயங்கள்» என்ற புதிய நூலின் படைப்பினை ஒன்றாகக்
கொண்டாடுவோம் வாருங்கள்.
இந்த நன்னாளில், நூலின் சில பகுதிகள் பின்வரும் வாசிப்பாளர்களால் வாசிக்கப்படும்:
• செல்வி. அஷ்மிதா திவாகரன்
• செல்வன். முருகவேள் அம்பலன்
• செல்வி. அருளினி முருகவேள்
• செல்வி. அபிராமி சுரேஸ்குமார்
• செல்வி. சசிகுமார் சம்யுக்தா
• செல்வி. மிருணாளினி மஞ்சுதன்
• செல்வி. மகிழினி சிவகீர்த்தி
வாசிப்பு
மாலை புத்துணர்ச்சியூட்டும் வாசிப்பையும், நல்ல சிறந்த உரையாடல்களையும்
வழங்கும். நூலினைப் படைப்பாளியிடமிருந்து நேரடியாக கையொப்பமிட்டுப்
பெற்றுக்கொள்ளமுடியும்.
மாலைச்சிற்றுண்டி ஏற்பாட்டுடன் உங்கள் அனைவரின் வருகையை எதிர்நோக்குகின்றோம்.
அன்புடன்
தமிழர் களறி
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



