உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 31 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

"மந்திர ராஜ வசியமும் " என சாஸ்திர நூல்களில்
இந்த எண் பற்றி எழுதப்பட்டுள்ளது . " 5 மனிதர்களும் 5 தடிகளும்
மோதிக்கொள்ளும் படம் எகிப்தியர்களால் இந்த எண்ணுக்கு தரப்பட்டுள்ளது .
"ஐம்பொறிகளை
அடக்க முடியாமல் அவைகளின் ஆதிக்க சக்தியால் ஆட்டுவிக்கப்படும் மனிதர்களை
இவ்வெண் காட்டுகிறது . " சிவ ராஜயோகம் பெற்ற இந்த எண் காரர்கள் வீரம்
விளையாட்டு துறை சினிமா நாடகம் எழுத்து இசை ஆகிய துறைகளிலும் பிரசித்தி
பெறுவர்.
பொன் பொருள் பதவி வீடு மனைவி வாகனம் அனைத்தும் இருந்தும்
மனம் தனிமையையும் தத்துவ ஏகாந்த நிலையையும் நாடும். சிறந்த நிர்வாகியாய்
போதும் தனது பெயரில் சொத்துக்களையோ பணத்தையோ வைத்து இருக்க கூடாது . காரிய
தடைகளுக்கு பிறகு காரிய சித்தி உண்டாகும்.
உயர் பதவி மனிதர்களின்
நட்பு ஏற்படும். சுதந்திரமே பிரதானமாக இருக்கும். போராடி வெற்றி பெற்றாலும்
பலனை அனுபவிக்க முடியாமல் போகும். வெற்றி மயக்கம் இவர்களுக்கு மகிழ்ச்சியை
தருவதில்லை . 31 வது வயதில் எல்லாவற்றையும் இழக்க அல்லது துறக்க வேண்டிய
நிலை ஏற்படும்.
நாளும் தெரிந்தவராக இருந்தாலும் எதிர்பாராத
நிகழ்சிகளாலும் திடீர் முடிவுகளாலும் பாதிக்கபடுவர். ஆனால் தீர்க்க
தரிசனத்தால் தனது முடிவை தானே உணர்வார்கள் .கடக ராசியில் இந்த 31 எண்
வருவதால் ஆன்மீக சக்தியால் இவர்கள் காப்பாற்ற படுவார்கள்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



