7 வயது சிறுமியின் மரணத்திற்கு காரணமான நபர் பிரான்சிற்கு நாடு கடத்தல்
#France
#Migrant
#Accuse
#extradite
Prasu
1 day ago

புலம்பெயர் சிறுமி ஒருவர் மரணத்திற்கு காரணமானதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணையை எதிர்கொள்ள பிரான்சுக்கு நாடு கடத்தப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 2024 ல் விமெரியக்ஸிலிருந்து பிரித்தானியாவிற்ப் புறப்பட்ட ஒரு சிறு படகில், நெரிசல் காரணமாக ஏழு வயதேயான சாரா அல்ஹாஷிமி என்ற சிறுமி உட்பட ஐவர் உடல் நசுங்கி மரணமடைந்தனர்.
இந்த விவகாரத்தில் 20 வயது Musaab Altijani என்ற சூடான் நாட்டவர் மேற்கு லண்டனில் ஹில்லிங்டன் பகுதியில் மே மாதம் கைதானார்.
இந்த நிலையில், விசாரணையின் பொருட்டு அந்த நபரை நாடுகடத்துவதாக மாவட்ட நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் ஐந்து மரணங்கள் தொடர்பாக பிரெஞ்சு நீதிமன்றம் தன்னிச்சையான கொலை வழக்கைப் பதிவு செய்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



