குஜராத்தில் பயிற்சியின் போது விபத்துக்குள்ளான போர் விமானம் - விமானி மரணம்
#India
#Death
#Flight
#Accident
#War
Prasu
16 hours ago

குஜராத்திலுள்ள ஜம்நகர் மாவட்டத்தில், திறந்த புல்வெளியில் இந்திய விமானப்படை விமானம் விழுந்ததைத் தொடர்ந்து அதன் விமானிகளில் ஒருவர், பலத்த காயங்களால் உயிரிழந்ததாக விமானப்படை தெரிவித்துள்ளது.
விமானத்திலிருந்து தக்க நேரத்தில் தன்னை வெளியேற்றிய மற்றொரு விமானி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் ஆகாயப்படை தெரிவித்துள்ளது.
ஜாகுவார் போர்விமானம், பயிற்சிக்காகப் பறந்துகொண்டிருந்தபோது திடீரென்று சுவர்டா கிராமத்திலுள்ள புல்வெளி ஒன்றின்மீது விழுந்து நொறுங்கியது.
உயிரிழப்புக்காக மிகவும் வருந்துவதாகத் தெரிவித்த இந்திய ஆகாயப்படை, உயிர்நீத்த விமானியின் குடும்பத்திற்குப் பக்கபலமாய் நிற்பதாகத் தெரிவித்தது. திறந்த புல்வெளியில் விழுந்த விமானத்தால் பொதுமக்கள் காயமடையவில்லை.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



