IPL - ஐதராபாத் அணியை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

#IPL #Cricket #hyderabad #Kolkatta
Prasu
16 hours ago
IPL - ஐதராபாத் அணியை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 15வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. 

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. இதையடுத்து 201 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நேர்த்தியான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.

ஐதராபாத் அணி வீரர்கள் யாருமே சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை. 16.4 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த ஐதராபாத் அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் கொல்கத்தா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணியில் சிறப்பாக பந்து வீசிய வைபப் ஆரோரா மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1743714377.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!