ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் தொடர்பில் இயக்குனர் செல்வராகவன் வெளியிட்ட தகவல்!

கார்த்தி நடிப்பில் உருவாகி மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து இயக்குனர் செல்வராகவன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பேசியுள்ள அவர், ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகத்தில் தனுஷூம் நானும் ஒரு வாரமாக ஆலோசித்து முடிவு செய்தோம். ஆனால் இதில் நாங்கள் செய்த தவறு படம் குறித்து முன்கூட்டியே அறிவித்தது தான்.
ஆயிரத்தில் ஒருவன்-2 பண்ண வேண்டும் என்றால் அது கார்த்தி இல்லாமல் முடியாது. அந்த உலகத்தை நான் திருப்பிக் கொண்டு வரவேண்டும்.
அந்த சமூகம் அதிகளவில் இருக்கும். அது ஒரு கடினமான கதையாக இருக்கும். அதற்கு தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும். நடிகர்கள் ஒரு ஆண்டுக்கு கால் ஷீட் ஒதுக்க வேண்வேண்டும் போன்ற நிறைய விஷயங்கள் உள்ளது. ஆயிரத்தில் ஒருவன்-2ம் பாகம் எடுக்க வெறித்தனமான ஆசை இருக்கு. ஆனால் அதற்கு எல்லாம் கைக்கூட வேண்டும். எனக் கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




