சிங்கப்பூரில் தீ விபத்தில் சிக்கிய பவன் கல்யாணின் மகன்

ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண். ஜனசேனா கட்சி தலைவரான இவர் தெலுங்கு திரைத்துறையின் முன்னணி நடிகராகவும் செயல்பட்டு வருகிறார்.
பவன் கல்யாணுக்கு 8 வயதில் மார்க் சங்கர் என்ற மகன் உள்ளார்.8 வயதான மார்க் சங்கர் சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் கல்வி பயின்று வருகிறார்.
இந்நிலையில், மார்க் சங்கர் பயின்று வரும் பள்ளியில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மார்க் சங்கர் சிக்கிக்கொண்டான்.
அச்சிறுவனுக்கு கை, கால்களில் லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். ம
கன் தீ விபத்தில் சிக்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மகன் மார்க் சங்கரை காண பவன் கல்யாண் சிங்கப்பூர் செல்ல உள்ளார். இதற்காக இன்று அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



