வாக்குமூலம் வழங்க சிஐடியில் முன்னிலையான முக்கிய அரசியல்வாதிகள்
#SriLanka
#Lanka4
#srilankan politics
#SHELVA FLY
Mayoorikka
1 week ago

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று மீண்டும் முன்னிலையாகினார்ர்.
தரமற்ற நோய் எதிர்ப்பு தடுப்பூசி சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்கவே அங்கு அவர் முன்னிலையாகியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கடந்த 9ஆம் திகதியும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



