அஜித்தின் 64வது திரைப்படம் குறித்து வெளியான அப்டேட்!

அஜித் நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு படங்கள் வெளியாகி உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் விடாமுயற்சி வெளியான நிலையில், தற்போது குட் பேட் அக்லி வெளியாகி உள்ளது.
அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் பெருவாரியான ரசிகர்களுக்கு இந்த படம் அவ்வளவாக பிடிக்கவில்லை. முதல் நாளில் 30 கோடி வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குகிறார் என்று எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது. 63வது படமான குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.
அஜித்தின் 64வது படத்தை சிறுத்தை சிவா அல்லது விஷ்ணுவர்தன் இயக்கலாம் என்று முன்பே கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் அஜித்தின் 64வது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார் என்றும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



