இன்றைய ராசிபலன் (13.04.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

மேஷம்:
அசுவினி: மகிழ்ச்சியான நாள்.
நண்பர்களின் ஒத்துழைப்பு உங்கள் வேலைகளை வெற்றியாக்கும்.பரணி: திட்டமிட்ட
வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். உடல்நிலை சீராகும். கார்த்திகை 1:
வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.
ரிஷபம்:
கார்த்திகை
2,3,4: தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். வியாபாரத்தில் முன்னேற்றம்
ஏற்படும். ரோகிணி: உங்கள் புத்திசாதுரியம் வெளிப்படும். பூர்வீக சொத்து
விவகாரம் சாதகமாகும். மிருகசீரிடம் 1,2: குடும்பத்தினர் விருப்பமறிந்து
செயல்படுவீர். உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுனம்:
மிருகசீரிடம்
3,4: விருப்பம் நிறைவேறும் நாள். எடுத்த வேலைகளை முடித்து ஆதாயம்
அடைவீர்கள். திருவாதிரை: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
இழுபறியாக இருந்த வேலையை இன்று முடிப்பீர். புனர்பூசம் 1,2,3: திட்டமிட்டு
செயல்படுவீர். பிள்ளைகளின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்.
கடகம்:
புனர்பூசம்
4: உழைப்பால் உயர்வு காணும் நாள். உதவி கேட்டு வந்தவர்களுக்கு உங்களால்
முடிந்ததை செய்வீர்கள். பூசம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். ஆயில்யம்: சூழ்நிலை அறிந்து
செயல்படுவீர்கள். இன்று வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மையாகும்.
சிம்மம்:
மகம்:
நினைப்பது நிறைவேறும் நாள். வர வேண்டிய பணம் வரும். பொருளாதார நிலை
உயரும். பூரம்: உறவினர்கள் உதவியால் எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிர்காலம்
பற்றிய சிந்தனை மேலோங்கும்.உத்திரம் 1: உங்கள் முயற்சி இன்று ஆதாயமாகும்.
பணப்புழக்கம் கூடும். தாராளமாக செலவுகள் செய்வீர்.
கன்னி:
உத்திரம்
2,3,4: மனக்குழப்பம் விலகி தெளிவு உண்டாகும். வியாபாரத்தில் இருந்த
நெருக்கடி நீங்கும். அஸ்தம்: உங்களிடம் ஒப்படைத்த வேலையை செய்து
முடிப்பீர். எதிர்பார்த்த வருமானம் வரும். சித்திரை 1,2: உங்கள் செயல்களில்
இன்று வேகம் இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.
துலாம்:
சித்திரை
3,4: முன்னேற்றமான நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். செலவுகள்
கட்டுப்படும். சுவாதி: வியாபாரத்தில் லாபம் கூடும். தடைபட்டிருந்த வேலைகள்
நடந்தேறும்.விசாகம் 1,2,3: வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடங்கள்
தோன்றும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்.
விருச்சிகம்:
விசாகம்
4: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் புதிய
முதலீட்டைத் தவிருங்கள். அனுஷம்: நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வேலை இன்று
நிறைவேறும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.கேட்டை: நெருக்கடியில் இருந்து
விடுபடுவீர். குடும்பத்தினர் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர்.
தனுசு:
மூலம்:
அதிர்ஷ்டமான நாள். எதிர்பார்த்த வருவாய் ஏற்படும். பொருளாதார நிலை உயரும்.
பூராடம்: உங்கள் முயற்சி வெற்றியாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு
உயரும். உத்திராடம் 1: மனதில் நிம்மதி ஏற்படும். பிறரால் முடிக்க முடியாத
ஒரு வேலையை முடித்துக்காட்டுவீர்.
மகரம்:
உத்திராடம் 2,3,4:
வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். பணியாளர்களின் ஆதரவு அதிகரிக்கும்.
திருவோணம்: வியாபார நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.
வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். அவிட்டம் 1,2: தடைபட்ட வேலைகளை நடத்தி
முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.
கும்பம்:
அவிட்டம்
3,4: நெருக்கடி நீங்கும் நாள். நேற்றுவரை இருந்த குழப்பம் விலகும்.
வருமானம் திருப்தி தரும்.சதயம்: பணியிட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.பூரட்டாதி 1,2,3: காலை வரை
சந்திராஷ்டமம் இருப்பதால் மனம் குழப்பமடையும். அதன்பின் முயற்சி
வெற்றியாகும்.
மீனம்:
பூரட்டாதி 4: கவனமுடன் செயல்பட வேண்டிய
நாள். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும்.உத்திரட்டாதி: குடும்பத்தில்
எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். இன்று வெளியூர் பயணத்தை தவிர்ப்பது
நல்லது. ரேவதி: வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவதும், புதிய முயற்சிகளைத்
தவிர்ப்பதும் நன்மையாகும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



