இன்றைய ராசிபலன் (14.04.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 day ago
இன்றைய ராசிபலன் (14.04.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

மேஷம்:
அசுவினி: மகிழ்ச்சியான நாள். நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் வேலைகள் நடந்தேறும். பரணி: எதிர்பார்த்த பணம் வரும். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். கார்த்திகை 1: உங்கள் செல்வாக்கு உயரும். முடியாமல் இருந்த வேலைகளை முடிப்பீர்கள்.

ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். வேலையில் இருந்த தடைகள் விலகும். உடலில் உண்டான பாதிப்பு நீங்கும். ரோகிணி: தடைகளை சரிசெய்வீர். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மிருகசீரிடம் 1,2: இழுபறியாக இருந்த முயற்சியில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவர். திருவாதிரை: பூர்வீக சொத்து பற்றிய பேச்சு எழும். உறவினரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.புனர்பூசம் 1,2,3: நீண்ட நாள் பிரச்னை முடிவிற்கு வரும். சிலர் குடும்பத்தினருடன் கோயிலுக்கு செல்வீர்கள்.

கடகம்:
புனர்பூசம் 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.பூசம்: நெருக்கடிகளை சமாளித்து எண்ணியதை அடைவீர். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை நீங்கும்.ஆயில்யம்: தாய்வழி உறவினரால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.

சிம்மம்:
மகம்: முன்னேற்றமான நாள். திட்டமிட்டு செயல்படுவதால் நீங்கள் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பூரம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். பழைய பிரச்னைகளை சரி செய்வீர். புதிய வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்.உத்திரம் 1: உங்கள் செயல்களில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம்.

கன்னி:
உத்திரம் 2,3,4: வரவில் இருந்த தடை அகலும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். அஸ்தம்: நினைப்பது நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். சித்திரை 1,2: எதிர்பாராத வரவு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். கோயிலுக்கு செல்வீர்கள்.

துலாம்:
சித்திரை 3,4: எதிர்பார்த்த தகவல் வரும். மனதில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் லாபம் கூடும்.சுவாதி: வழிபாட்டில் பங்கேற்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.விசாகம் 1,2,3: முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.

விருச்சிகம்:
விசாகம் 4: ஆதாயமான நாள். நிதானமாக செயல்பட்டு நன்மை அடைவீர். அனுஷம்: பிறருக்கு கடன் கொடுப்பதையும், புதிய முயற்சிகளையும் தவிர்ப்பது நன்மையாகும்.கேட்டை: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். வியாபாரத்தில் தோன்றிய எதிர்ப்புகள் விலகும்.

தனுசு:
மூலம்: மகிழ்ச்சியான நாள். வருமானம் உயரும். சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர்கள்.பூராடம்: தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும்.உத்திராடம் 1: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். நண்பர்களிடம் எதிர்கால திட்டம் பற்றி ஆலோசனை மேற்கொள்வீர்.

மகரம்:
உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவர். திருவோணம்: நீங்கள் நினைப்பது நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கும்பம்:
அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள். பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும்.சதயம்: தடைகளைத் தாண்டி நினைத்ததை சாதிப்பீர். பெரியோரின் ஆசி கிடைக்கும்.பூரட்டாதி 1,2,3: நடக்காது என்று நீங்கள் நினைத்திருந்த வேலை இன்று முடிவிற்கு வரும்.

மீனம்:
பூரட்டாதி 4: வழிபாட்டால் சங்கடங்கள் விலகும் நாள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நன்மையாகும்.உத்திரட்டாதி: உங்கள் மனதை சங்கடப்படுத்தும் அளவிற்கு உடன் இருப்பவர்களின் செயல்பாடுகள் இருக்கும். ரேவதி: சந்திராஷ்டமம் தொடர்வதால் இன்று உங்கள் செயல்கள் அனைத்திலும் விழிப்புணர்வு அவசியம்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1744582156.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!