வாசகர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

#SriLanka #New Year
Mayoorikka
1 day ago
வாசகர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

2025 சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு இன்று (ஏப்ரல் 14) அதிகாலை 03:21 மணிக்கு சுப நேரத்தில் உதயமானது. தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக நாம் கொண்டாடுகிறோம். 

தமிழ் புத்தாண்டு, தமிழ் வருடப் பிறப்பு, சித்திரை பிறப்பு, சித்திரை விஷூ, சித்திரைக் கனி, சங்கராந்தி என பல பெயர்களால் இது கொண்டாடப்பட்டு வருகிறது.

 சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். இந்த நாளில் தான் பிரம்ம தேவர் உலக உயிர்களை படைக்க துவங்கியதாக சொல்லப்படுகிறது. 

சூரிய பகவான், மேஷம் துவங்கி மீனம் வரை 12 ராசிகளிலும் தனது பயணத்தை நிறைவு செய்வதை ஒரு ஆண்டு என்கிறோம். 2025 ஏப்.14-ம் திகதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கனி காண்பது மிகவும் சிறப்புக்குரியது.

 தமிழ் புத்தாண்டை பாரம்பரிய முறையில் கொண்டாட நம் முன்னோர் சில வழி முறைகளை கடைபிடித்து வைத்துள்ளனர். அதாவது தமிழ் புத்தாண்டை கொண்டாட முதல் நாளே அனைத்தையும் தயார் செய்து விட வேண்டும். வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையில் சுவாமி படங்களை துடைத்து வைத்து விட வேண்டும். . உலக மக்கள் அனைவருக்கும் வறுமை இல்லாமல் இருக்கவே தாம்பூலத்தில் தானியங்களும், அரிசி, பருப்பு போன்றவையும் வைக்கிறோம்.

 செல்வங்களும், மற்ற எல்லா வளங்களும் அனைவருக்கும் கிடைக்க மனதார பிரார்த்தித்து இந்த சித்திரை மாதத்தை வரவேற்று, தமிழ் புத்தாண்டை இனிமையாக கொண்டாடுங்கள். புத்தாண்டு மக்களுக்கு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தை கொண்டு வர லங்கா4  ஊடகத்தின்  வாழ்த்துக்கள்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1744496757.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!