சிறீதரன் எம்பி பற்றி பரப்பப்படும் பொய்ச்செய்தி - கோபத்தில் சிறீதரன்

#SriLanka #Kilinochchi #Minister #sritharan
Lanka4
1 day ago
சிறீதரன் எம்பி பற்றி பரப்பப்படும் பொய்ச்செய்தி - கோபத்தில் சிறீதரன்

கடந்த சில நாட்களாக கிளிநொச்சி பிரதேசத்திலே விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர் ஒருவர் சிறுவர் துஸ்பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பிலே சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

இந்த விடயம் தொடர்பிலே தமிழ்ச்செல்வன் என்னும் ஊடகவியலாளர் முதன் முதலிலே முகநூல் பக்கத்திலே இந்த செய்தியை வெளியிட்டிருந்தார்.அதனை தொடர்ந்து சமூக ஊடகங்கள் இதை பல்வேறு கோணங்களில் விமர்சனம் செய்து வந்தனர்.

குறிப்பாக இந்த விடயத்தில் சிறீதரன் தொடர்புபடுத்தப்பட்டிருந்தார். குறித்த விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர் கடந்த பல வருடங்களாக இது தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடந்த காலங்களில் ஒரு முன்னாள் போராளியாக இருந்தவர் என்பதோடு தமிழசுக்கட்சியில் ஒரு ஆதரவாளராக மட்டுமே இவர் இருந்து வந்துள்ளார். அத்தோடு குறித்த நபர் தமிழரசுக்கட்சின் எந்தவித கட்சி பொறுப்புக்களும் வகித்தவரும் இல்லை.

குறித்த நபர் சிறீதரன் எம்பி சம்பந்தப்பட்ட எந்த இடத்தில் இருந்தும் கைது செய்யப்படவில்லை என பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர் தொடர்பான செய்தியை முதன் முதல் வெளியிட்ட ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் என்பவரே உறுதிப்படுத்தியிருக்கின்றார் அறிவியல் நகரிலே வைத்து இவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்பதை.

அறத்துடன் அரசியலை எதிர்கொள்ள தைரியமற்ற கேவலமான மனிதர்கள் சிலரே சிறீதரன் எம்பியின் பெயரிற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்குடன் இப்படியான பொய்த்தகவலை வெளியிட்டு பரப்பி வருகிறார்கள்.

குறித்த துஷ்பிரயோக சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட நபரின் எந்த விடயத்திலும் சிறீதரன் எம்பி தலையிட்டடிருக்கவில்லை. தேர்தல் காலம் என்பதால் சிறீதரன் எம்பியின் அரசியலை பலவீனப்படுத்தும் நோக்கில் இப்படியான கட்டுக்கதைகளை கீழ்த்தரமாக பரப்பிவருகிறார்கள்.

சிறீதரன் எம்பி குறித்த விடயத்தில் எதாவது சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று சொல்பவர்கள் யாராவது, ஆதாரத்தோடு சிறீதரன் எம்பி சம்பந்தப்பட்ட விடயத்தை பகிருங்கள்.

குறித்த நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சட்டம் தன் கடமையை செய்து சிறந்த தண்டனை வழங்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.

நேர்மையாக அரசியல் செய்து வெல்ல முடியாத இயலாமையில் இப்படி கீழ்த்தரமான பொய்களை பரப்பி கேவலமான அரசியலை செய்யாதீர்கள் என சிறீதரனின் கிளிநொச்சிக் கிளை கூறுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!