கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தரை தாக்கிய பொலிஸாருக்கு அழைப்பு விடுத்த மனித உரிமை ஆணைக்குழு!

#SriLanka #Kilinochchi #Human Rights #ADDA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #CINEMAALAI
Thamilini
1 year ago
கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தரை தாக்கிய பொலிஸாருக்கு அழைப்பு விடுத்த மனித உரிமை ஆணைக்குழு!

கடந்த வாரம் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றிய சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய பொலீஸாரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் விசாரணைக்கு அழைத்துள்ளது.

கிளிநொச்சி சாந்தபுரத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தரான இளைஞன் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்கள் காரணமின்றி தன்னை தாக்கி கைவிலங்கிட்டதாக  முறைப்பாடு செய்திருந்தார். 

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் வருகின்ற 21 ஆம் திகதி மனிதஉரிமைகளை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்ட பொலீஸ் உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி,மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலீஸ் அதிகாரி ஆகியோரை விசாரணைக்கு வருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பானை விடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

                                                                        

                                                      லங்கா4 (Lanka4)

(வீடியோ VIDEO)

அனுசரணை

images/content-image/1744716185.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4