இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் மூன்று மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய ரணில்!

#SriLanka #Ranil wickremesinghe #Lanka4 #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
4 hours ago
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் மூன்று மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய ரணில்!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு இன்று காலை சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிக நீண்ட வாக்குமூலத்தினை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 சுமார் 10 பக்கங்களுக்கான வாக்குமூலத்தினை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் 3 மணி நேர வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

 ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க முதலமைச்சராக இருந்த போது நடந்த மோசடி சம்பவம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

 இந்த மோசடி தொடர்பில் ஏற்கனவே சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அது குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிக்கைக்கமைய அவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1745792219.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!