1000 கோடி ரூபாயை சேர்த்து வைத்துள்ள நளிந்த ஜயதிஸ்ஸ!

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் வீண்விரயங்களைக் குறைத்துள்ளதாகவும், ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் என்ற வகையில் தான் மட்டும் 1000 கோடி ரூபாயைச் சேமித்துள்ளதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகிறார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "நான் மந்திரி சம்பளம் வாங்குவதில்லை. பாராளுமன்ற கொடுப்பனவு வாங்குவதில்லை. எனக்கு ஒரு இடத்தில் V8 உட்பட மூன்று வாகனங்கள், இன்னொரு இடத்தில் மூன்று, இன்னொரு இடத்தில் இரண்டு உள்ளன, ஆனால் நாங்கள் அந்த வாகனங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நான் வழக்கமான வாகனத்தைப் பயன்படுத்துகிறேன்.
ஒரு அமைச்சருக்கு வழங்கப்படும் எண்ணெய் கொடுப்பனவு பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. நாங்கள் மந்திரி உத்தியோகபூர்வ இல்லங்களைப் பயன்படுத்துவதில்லை. இதன் மூலம், நாங்கள் நிறைய பணத்தை மிச்சப்படுத்தியுள்ளோம்." எனக் கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



