இனப்படுகொலை நடைபெறவில்லை என்பதை நிரூபிக்க உள்ளூராட்சி சபைத் தேர்தலை பயன்படுத்த அரசு முயற்சி: சிறிதரன்

#SriLanka #Lanka4 #Local council #sritharan #Electric #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
10 hours ago
இனப்படுகொலை நடைபெறவில்லை என்பதை நிரூபிக்க உள்ளூராட்சி சபைத் தேர்தலை பயன்படுத்த அரசு முயற்சி: சிறிதரன்

வடக்கு கிழக்கில் இனப்படுகொலை நடைபெறவில்லை மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்களில் இலங்கையின் அரச, இராணுவ நிர்வாகம் ஈடுபடவில்லை என்பதை நிரூபிப்பதற்கான ஜனநாயகத் தீர்ப்பாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு பயன்படுத்த எல்லா வகைப் பிரயத்தனங்களையும், மோசடிகளையும் முன்னெடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

 முழங்காவில் - நாச்சிக்குடா சந்தியில் நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பூநகரி பிரதேச சபைக்கான தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு முதன்மை உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 இந்நிகழ்வில், கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், பூநகரி பிரதேச சபைக்கான வேட்பாளர்கள், கட்சியின் பிரதேச செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காலமானார். அவரது இறுதிக்கிரியைகள் இன்று (02) மாலையே நடைபெறவுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1746052587.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!