ஜனாதிபதியின் வியட்நாம் பயணத்தின் போது பல ஒப்பந்தங்கள்!

#SriLanka #Sri Lanka President #Lanka4 #President Anura #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
13 hours ago
ஜனாதிபதியின்  வியட்நாம் பயணத்தின் போது பல ஒப்பந்தங்கள்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொள்ளவுள்ள வியட்நாம் பயணம் குறித்து வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 மே மாதம் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை ஜனாதிபதி வியட்நாமுக்கு உத்தியோகபூர்வு பயணம் மேற்கொள்வார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி அநுரகுமார, வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட பல மூத்த பிரமுகர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன், ஹோ சி மின் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி கலந்து கொண்டு, முக்கிய உரையை நிகழ்த்துவார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இந்த விஜயத்தின் போது இரு தரப்பினருக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஜனாதிபதி கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது. இராஜதந்திர உறவுகளின் 55 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிலையில், வியட்நாம் விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் மூத்த அரச அதிகாரிகள் குழுவும் வருவார்கள் செல்வார்கள் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1746052587.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!