இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சார பணிகள் நிறைவு!

#SriLanka #Election #Election Commission #Local council #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
1 year ago
இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சார பணிகள் நிறைவு!

வாக்கெடுப்புக்கு 48 மணி நேரத்துக்கு முன்னர் அதாவது இன்று மே மாதம் 3 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள், குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 இன்று 3 ஆம் திகதி நடைபெறும் இறுதி அரசியல் பிரசாரக் கூட்டங்களின் வீடியோ காட்சிகள் மற்றும் விவரங்களை நாளை 4 ஆம் திகதியன்று ஒவ்வொரு தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசையில் ஒரு பிரதான செய்தி அறிக்கையில் மாத்திரம் பிரசாரம் செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 நாளை 4 ஆம் திகதியன்று வெளியாகின்ற செய்தித்தாள்களில் அக்கூட்டங்களின் புகைப்படங்களையும் அறிக்கைகளையும் வெளியிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஒவ்வொரு அலைவரிசையோடும் செய்தித்தாளோடும் இணைந்த சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய அனைத்து சமூக ஊடக தளங்களின் நிர்வாகிகளுக்கும் இந்த நிபந்தனைகள் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1746052587.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4