இலங்கையில் சற்று முன்னர் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
#SriLanka
#Death
#GunShoot
Prasu
3 days ago

மீட்டியாகொடவில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.
மீட்டியாகொட, தம்பஹிட்டியவில் அமைந்துள்ள ஒரு உணவகத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு தாக்குதல்தாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றொருவர் படுகாயமடைந்தார். காயமடைந்த நபர் பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



