பிரான்சில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் போராடும் நோயாளிகள்

1,500க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்களாட்சி உறுப்பினர்கள், மருத்துவர்களின் நியமனத்தை சரிசெய்யும் சட்ட முன்மொழிவுக்கு ஆதரவு தரும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் Guillaume Garot என்பவரால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த மசோதா, குறிப்பாக மருத்துவர்கள் ஏராளமாக உள்ள பகுதிகளில், ஒரு புதிய மருத்துவர் நியமனம் செய்வதற்கு முன் ஏற்கனவே பணியில் இருக்கும் மருத்துவர் ஒருவர் ஓய்வுக்கு செல்ல வேண்டும் என்ற நிபந்தனையை கொண்டுள்ளது.
இது மருத்துவர்கள் இல்லாத பகுதிகளுக்கு (déserts médicaux) வெற்றிடத்தை நிரப்பும் ஒரு முயற்சியாகும். இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் பல தரப்பினரால் ஆதரிக்கப்படுகிறது.
கையொப்பமிட்டுள்ள உள்ளூர் பிரதிநிதிகள், "அனைவருக்கும் சுகாதார சேவை" என்ற குடியரசுத் தீர்மானத்தை முன்னிலைப்படுத்தி, இந்த சட்டத்திற்கு வாக்களிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



