இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு விங்ரூப் குழும அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு!

வியட்நாமுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நேற்று (04) பிற்பகல் வியட்நாமில் உள்ள விங்ரூப் கூட்டு நிறுவனத்தின் உயர் நிர்வாகத்தைச் சந்தித்து கலந்துரையாடினார்.
விங்ரூப் குழும தலைமையகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கையின் ரியல் எஸ்டேட் மற்றும் சுற்றுலாத் துறைகளில் முதலீடு செய்யுமாறு விங்ரூப்பை ஜனாதிபதி அழைத்தார்.
விங்ரூப்பின் வெற்றி மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட உலகளாவிய பிராண்டுகளை கட்டியெழுப்பியதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, இலங்கையில் முதலீடுகளுக்கு நெகிழ்வான மற்றும் சாதகமான சூழலை உருவாக்க இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளது என்பதையும் வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் மூலோபாய புவியியல் இருப்பிடம், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் குறிப்பாக சுற்றுலா மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற அதிக திறன் கொண்ட துறைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை ஜனாதிபதி மேலும் எடுத்துரைத்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



