சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் : 11 பேருக்கு வகுப்புத்தடை
#SriLanka
#Death
#Lanka4
#students
#University
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
5 hours ago

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர். இதன்படி இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. .
புஸ்ஸல்லாவை - இஹலகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சரித் தில்ஷான் என்ற மாணவன் கடந்த 29 ஆம் திகதி பகிடிவதைக்கு உள்ளானதை அடுத்து உயிரை மாய்த்துக்கொண்டதாக அவரது தரப்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



