பகிடிவதை ஒரு குற்றமென்று தெரிந்தும் அதை இன்னும் ஏன் செய்கிறீர்கள்?

#SriLanka #Lanka4 #University #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
3 hours ago
பகிடிவதை ஒரு குற்றமென்று தெரிந்தும் அதை இன்னும் ஏன் செய்கிறீர்கள்?

சுமாராக 45 இலட்சம் பாடசாலை மாணவர்களிலிருந்து 45ஆயிரம் மாணவர்களை பல்கலைக்கழகத்துக்கு அரசு ஆண்டுதோறும் உள்வாங்குகிறது. அதனை தெய்வம் வழங்கிய வரமாக கருதி பல்கலைக்கழகத்துக்குள் பாரிய பெருமிதத்தோடும் வண்ணமயமான கனவுகளோடும் நுழையும் தமது கனிஷ்ட சகோதர சகோதரிகளை மகிவோடு அழைத்து, அரவணைத்து, உதவி செய்து, மேம்படுத்தி விடுவதற்கு பதிலாக அந்த அப்பாவிப் பிள்ளைகளை அழித்துவிடும் பயங்கரவாதிகளான பகடி வதையாளர்களை என்னவென்று சொல்வது? 

இவர்கள் படித்து என்ன பயன்? இவர்களது பட்டத்தினால் என்ன பயன்? மனிதகுல விழுமியங்களை பேணாத இவர்கள் படித்து என்ன பயன்? இவ்வேளையில் எல்லோருக்கும் ஒரு உண்மை வரலாற்றை முன்வைக்கிறேன். கீழே வரும் கதைக்கும் சபரகமுவ மாணவனின் மரணத்துக்கும் தொடர்பில்லை. என்றாலும் பல்கலைக்கழகம் நுழையும் அப்பாவிப்பிள்ளைகளின் கனவுகள் பற்றி அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக எழுதுகிறேன்.

 கல்குடா வலயத்தில் கல்வி கற்ற, தகப்பனை இழந்த, நான்கு இளைய சகோதரங்களுக்கு அக்காவான, குடும்பத்தின் மூத்த பிள்ளை ஒருவர். அவளுடைய குடும்பத்தில், உறவினரில் இதுவரை யாரும் பட்டதாரிகள் இல்லை. ஆனால் சிறுபராயம் முதலே பல பட்டதாரிகளை பற்றி இம்மாணவி கேள்விப்படுவாள். ஒவ்வொருவரையும் பற்றி கேள்விப்படும் போது தானும் பட்டம் முடிக்க வேண்டும். 

குடும்பத்தில் முதலாவது பட்டதாரியாக உருவாக வேண்டும் என உறுதியெடுத்துக் கொள்வாள், மனதுக்குள். நலிந்துபோன தனது தாய்க்கு ஆறுதல் கொடுக்க வேண்டும் என்ற அவசரம். தம்பி தங்கைகளையும் நன்றாக படிப்பிக்க வேண்டும் என்ற பொறுப்பு. தனது ஊரிலிருந்து 30 கி.மீ.தொலைவிலுள்ள மட்டக்களப்பு நகர் வரைதான் அவளுக்கு வேறு ஊர்கள் தெரியும்.

 அதற்கப்பால் அவளுக்கு இடமெதுவும் தெரியாது. இப்போதுதான் இந்த கதையை ஏன் சொல்கிறேன் என்ற விடயத்துக்கு வருகிறேன். தனது ஊரிலிருந்தது முதன்முதலாக மட்டக்களப்பு நகர் நோக்கி செல்லும் முதலாவது நாள். பல் பிடுங்குவதற்காக. அப்போது அவள் எட்டாம் வகுப்பு படிக்கிறாள். வந்தாறுமூலை. கிழக்கு பல்கலைக்கழகம் வருகிறது. பல்கலைக்கழக மாணவர்கள் பலர் பஸ்ஸிலிருந்து இறங்குகிறார்கள் ஏறுகிறார்கள். இவள் தனது தாயிடம் கேட்கிறாள், "இதுதானா அம்மா கம்பஸ்?'" தாய், "ஆம் மகள்" என்றதும் இரு கையையும் தலைக்கு மேல் கூப்பி வணங்குகிறாள்.

 திரும்பி வரும் போதும் அவ்வாறே வணங்குகிறாள். இவ்வாறு பின்னாட்களில் கிழக்கு பல்கலைக்கழகத்தை தாண்டி பயணஞ்செய்த ஒவ்வொரு தடவையும் தனது கோயிலாக நினைத்து கிழக்கு பல்கலைக்கழகத்தை கைகூப்பி வணங்குவது அவளது வழக்கமாயிற்று.

 உயர்தரம் கற்று முடியும் தறுவாயில் வீட்டிலே ஒரு தையல் மெஷின். நாளாந்தம் பெண்களுக்குரிய ஆடைகளை தைத்து வழங்குதன் மூலமும் ஒரு நூறு கோழிக்குஞ்களை வளர்க்கத் தொடங்கி முட்டைகளை விற்பதன் மூலமும் தனது குடும்ப பாரத்தை அம்மாவிடமிருந்து தனது தோளுக்கு மாற்றிக்கொண்டாள். இவ்வாறு நாட்கள் விரைந்தோடின.

 கல்வித்தாய் இவள் கேட்ட வரத்தை வழங்கினாள். கிழக்கு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்துக்கு அனுமதி கிடைத்தது. அவளது பிரார்த்தனை நிறைவேறியது. இன்று அவள் வருமானத்துக்கு பஞ்சமில்லாத ஒரு அரச அலுவலர். முயற்சியாண்மையாளர். பலர் அவளது பண்ணையில் வேலை செய்கிறார்கள்.

 ஆமாம். மக்களே இதிலிருந்து உங்களுக்கு என்ன புரிகிறது? ஒரு ஏழையின் கனவு புரிகிறதா? தாய் தந்தையை இழந்த படிக்கும் பிள்ளையின் துயரம், வலிகள்,தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள், அவர்களது பிரார்த்தனைகள், அவர்களுக்கு இருக்கும் அச்சங்கள் புரிகிறதா? இப்படியான பிள்ளைகள் சாகும் விதமாக யாரேனும் நடக்க முடியுமா? பகிடிவதை ஒரு குற்றமென்று தெரிந்தும் அதை இன்னும் ஏன் செய்கிறீர்கள்? அண்மையில் சபரகமுவ பல்கலைக்கழகத்துக்கு நுழைந்த மாணவனின் மரணம் பற்றிய வேதனையால் நான் இப்பதிவை இட்டேன்.

 ஒவ்வொருவரும் வண்ண வண்ண கனவுகளுடனேயே பல்கலைக்கழகம் வருகிறார்கள். யாரும் விளையாடாதீர்கள்.

 விளையாடுவதுதான் நோக்கமென்றால் எங்கோ தொலைந்து போங்கள். பல்கலைக்கழகத்துக்குள் கால் வைக்காதீர்கள்.

 நன்றி தினகரன் ரவி வலயக்கல்வி பணிப்பாளர் திருகோணமலை

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1746397919.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!