என்பிபியின் பிரச்சாரத்தின் போது தமிழீழ எழுச்சி பாடல்! மறுக்கும் கட்சி

#SriLanka #Election #Lanka4 #NPP #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
3 hours ago
என்பிபியின் பிரச்சாரத்தின் போது  தமிழீழ எழுச்சி பாடல்! மறுக்கும் கட்சி

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வெளியான பிரசார பாடல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், குறித்த பாடல்களுக்கும் தமக்குமான தொடர்பை அக்கட்சி மறுத்துள்ளது.

 சுயாதீன கலைஞர்கள் குழுக்கள் சிலவற்றால் உருவாக்கப்பட்ட குறித்த பாடல்கள் முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டு யாழ் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் முகநூல் பக்கம் இணைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பாடல் உருவாக்கம் மற்றும் பரப்புரைகளுக்கும் தேசிய மக்கள் சக்தி மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும் எந்த தொடர்பும் இல்லையென தேசிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் நிஹால் அபேசிங்க மறுப்பு வெளியிட்டுள்ளார்.

 குறித்த பாடலில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் போராட்டம் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நிலைப்பாடுகளுடன் தொடர்புபடுத்தப்பட்டிருந்த நிலையில், வடக்கு கிழக்கில் சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்தது. எவ்வாறாயினும் குறித்த பாடலுடன் தமது கட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லையென அமைச்சர் சந்திரசேகர் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1746656421.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!