சுவிற்சர்லாந்தில் மக்களை அச்சுறுத்திய சத்தம்
#Flight
#Switzerland
#Military
Prasu
2 months ago

நேற்று மதியம் சுவிஸ் மாகாணமொன்றின் மக்கள் திடீரென எழுந்த பயங்கர சத்தம் காரணமாக அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில், சுவிஸ் விமானப்படை அது தொடர்பாக விளக்கமளித்துள்ளது.
அது விமானப்படையின் இரண்டு விமானங்கள் ஏற்படுத்திய சத்தம் என விமானப்படை விளக்கமளித்தது.
போர்ப்பயிற்சியில் ஈடுபட்ட விமானங்களால் அந்த சத்தம் உருவானதாக தெரிவித்துள்ள விமானப்படை, சத்தத்தைக் குறைப்பதற்காக தாங்கள் அதற்கேற்ற உயரத்தில் விமானங்களை இயக்க முயல்வதுண்டு என்றும், ஆனால், வானிலை காரணமாக சில நேரங்களில் அது சாத்தியமாவதில்லை என்றும் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



