வாக்குக்காக கசிப்பு வழங்கிய கட்சி தமிழரசுக் கட்சி அல்ல!சபையில் சிறிதரன் காட்டம்
#SriLanka
#Lanka4
#sritharan
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
7 hours ago

இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்றில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி கசிப்பை வழங்கி வெற்றியீட்டியதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்ததாக சிறிதரன் குறிப்பிட்டார். தனிநபர் பிரேரணைகள் தொடர்பான விவாதத்தில் சிறிதரன் இதனைத் தெரிவித்திருந்தார்.
ஒருபோதும் இலங்கைத் தமிழரசுக் கட்சி இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்காது என சுட்டிக்காட்டினார்.
இதேவேளை பணம் வழங்கி வாக்குகளைப் பெற்ற தரப்பினரும் தாம் இல்லையென சிறிதரன் குறிப்பிட்டார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



