03ஆவது நாளாக எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் - பஞ்சாப் மாநிலத்தின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட்!

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், நேற்று (09.05) நள்ளிரவிற்கு பிறகு ஜம்மு- காஷ்மீர் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஆந்திராவை சேரந்த முடவத் முரணி நாயக் என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். இவர் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணைந்துள்ளார்.
இதற்கிடையில் பாகிஸ்தான் இராணுவம் கடந்த மூன்று நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது.
இந்நிலையில் நேற்றிரவு முதல் பாகிஸ்தான் அத்துமீறி நடத்தி வரும் தாக்குதல்களில் 5 பேர் உயிரிழந்தனர். ரஜோரி, ஜம்மு, பூஞ்ச் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் அரசு அதிகாரி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் அத்துமீறலை தொடர்ந்து பஞ்சாபின் 3 பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அமிர்தசரஸ், பதிண்டா, ஜலந்தல் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



