100 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நால்வர் கைது!
#SriLanka
#Arrest
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
17 hours ago

ரூ.100 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகளுடன் நான்கு நபர்களை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சமீபத்திய வரலாற்றில் இதுவே மிகப்பெரிய சிகரெட் பறிமுதல் என்று சுங்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சிகரெட் பக்கெட்டுகளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக கொழும்பின் வெல்லம்பிட்டிய, தெமட்டகொட, பம்பலப்பிட்டிய மற்றும் கொஸ்வத்த பகுதிகளைச் சேர்ந்த 25 முதல் 30 வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்கள் சுங்க அதிகாரிகளால் கைது செய்துள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



