அனுராவுக்கு தமிழ் மக்கள் எச்சரிக்கை (வீடியோ இணைப்பு)

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பாராளுமன்ற அமர்விலே ஒரு விடயத்தை குறிப்பாக ஆத்திரத்தோடும் கோபத்தோடும் கூறியிருக்கிறார்கள் காணி அபகரிப்பு அல்லது காணி விடுவிப்பு அல்லது காணி தொடர்பான செய்தியாக இருக்கிறது.
தமிழர் பகுதியிலே 5400 ஏக்கர் கனிகளை அரசாங்கம் பிடித்து வைத்திருக்கிறது. இருந்தும் அதனை விடுவிப்பதற்கு மூன்று மாத அவகாசங்கள் இந்த காணி சொந்தக்காரர்கள் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் அதற்குள் தங்களுடைய பத்திரங்களுக்கான புத்தகங்களை சமர்ப்பித்து தங்களுடைய காணி என்பதை உறுதிப்படுத்தி அதன் பிற்பாடு அவர்களுக்கு கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மூன்று மாதம் வரைக்கும் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது அந்த அவகாசத்திக்குள்ளே இவர்கள் காணியை நிரூபித்து தங்களுடைய பத்திரங்களை சமர்ப்பித்து அந்த காணிகளை பெறவில்லையாக இருந்தால் அந்தக் காணியை பொதுமக்களுக்கு பிரித்துக் கொடுக்கப் போவதாகவும் அல்லது அரசாங்கம் கையகப்படுத்த போவதாகவும் கூறப்பட்டிருக்கிறது அதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பாராளுமன்றத்திலே அந்த காணி விவகாரம் தொடர்பாக குறிப்பிட்டிருந்தார். அதாவது திட்டமிட்டு இனப்பிரவல் இஸ்லாமியர்களுக்கும் அல்லது சிங்களவர்களுக்கும் குடியேற்றத்திற்கு கொடுக்கப் போகின்றார்கள் என்பது நூற்றுக்கு நூறு வீதம் நாங்கள் கூறுகின்ற விடயம் என்று கூறியிருக்கிறார்.
அந்த வகையிலே அது பரவலாக அனைத்து ஊடகங்களிலும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது குறித்த 5400 ஏக்கர் காணியிலிருந்து இடத்தை விட்டு அகன்று புலம் பெயர்ந்து வாழும் மக்கள் பலர் போரிலே பாதிக்கப்பட்ட பொழுதும் முள்ளிவாய்க்கால் கடைசி யுத்தத்தின் போது அவர்கள் முட்கம்பிகலுக்குள் சென்று சரணடைந்த பொழுதும் அவர்கள் தங்களுடைய பல பத்திரங்களை தொலைத்தவர்களாகவும் இருக்கிறார்கள் அதைவிட 35, 40 வருடங்களுக்கு மேற்பட்டு நாட்டை விட்டு அகன்று அகதியாக இருக்கின்ற வெளிநாட்டில் இருக்கின்ற புலம்பெயர்ந்த மக்கள் கூட பலரிடத்தில் அந்த காணி பத்திரங்கள் இல்லை ஆனால் அதற்கான அத்தாட்சிகளோ சாட்சிகளோ அவர்களுக்கு இருக்கிறது ஆனால் இவர்கள் என்ன அத்தாட்சியை கேட்க போகின்றார்கள் எப்படி கேட்க போகின்றார்கள்?
எப்படி அந்த காணிகளை அரசாங்கம் அபகரிக்கப் போகுகின்றது என்பதை திட்டவட்டமாக கூற முடியாமல் இருக்கிறது இல்லையேல் அதன் பத்திரங்களை காட்டினால் மாத்திரம் அந்த காணிகள் கொடுக்கப்படும் என்ற சட்ட திட்டமோ அல்லது அதற்கான ஒழுங்கமைப்பு செய்யப்படுமாக இருந்தால் ஓரளவுக்கு அந்த காணி சொந்தக்காரர்கள் அந்த காணிகளை தாங்களே பெற்றுக் கொள்கின்ற வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.
மேலதிக தகவல்களை பெற வீடியோவை கிளிக் செய்யவும்



