தமிழரசுக் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்!

#SriLanka #Election #Lanka4 #IlankaThamilarasukKadsi #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
3 hours ago
தமிழரசுக் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்!

வேட்பாளர்கள் தொடர்பாக இனிவரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுள்ளது.

 இந்த கலந்துரையாடலில் வரவேற்கத்தக்க தீர்மானங்களும் முன்மொழிவுகளும் எடுத்துரைக்கப்பட்டன. அவைகள் யாவும் பெரும் கரகோசத்துடன் அனைத்து வேட்பாளர்களும் மகிழ்வுடன் ஆமோதித்து வழிமொழிந்தார்கள்.

 சட்டத்தரணி திரு கேசவன் சயந்தன் அவர்களால் இன்று எடுத்துரைக்கப்பட்டது யாதெனில் ; இன்று நடைபெற்ற வேட்பாளர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் போது , இனவிடுதலைக்கான எமது கட்சியின் பயணத்தில் எமது கட்சியின் வளர்சியையும் "மக்களின் விருப்புக்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் வேட்பாளர்களின் செயற் திறன்களைக் கௌரவிக்கும் முகமாகவும்" எமது கட்சியானது வருங்காலங்களில் சில முக்கியமான விடயங்களை தீர்மானமாக எடுத்து நிறைவேற்றவுள்ளது.

 எமது பொதுச் செயலாளரின் அறிவுரைக்கு அமைவாகவும் தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்கவும் போட்டியிட்ட எமது செயற் திறன்மிக்க அனைத்து வேட்பாளர்களும் பிரதேச சபை உறுப்பினர்களாக பதவி வகிக்கும் வண்ணம் ஒரு ஒழுங்கு முறையில் பதவிகள் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் . "எமது வட்டார மக்களின்,கட்சியின் செயற்பாட்டாளர்களின் விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்றவகையில் நியமனங்கள் நடைபெறும்".

 கடந்த காலங்களிலும் எமது சபை முன்னுதாரணமாக நடந்து கொண்டுள்ளது என்பதையும் திரு சயந்தன் அவர்கள் சுட்டிக்காட்டினார். தேர்தலின் பின்னர் வட்டாரத்தில் உள்ள மக்களை எமது வேட்பாளர்கள் மக்களின் வீடுகளுக்குச் சென்று சந்திக்கவேண்டும் .

 அவர்களது குறைகள் கேட்டு அறியப்பட்டு குறிப்பெடுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு அதற்கு செயல்வடிவம் கொடுக்க பிரதேச சபைகள் மாகாணசபைகளின் அதிகாரங்களையும் வழங்களையும் முழுமையாக பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். அதேநேரம் உங்களுடைய செயற்திறண்களையும் வளர்த்துக்கொண்டு அதி சிறந்த சேவையை மக்களுக்கு வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

 இக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் /செயலாளர் உட்பட   S.சுகிர்தன் அவர்களும் தொகுதிக் கிளை முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறந்த வழிகாட்டல்களையும் எடுத்துரைத்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1746915357.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!