இந்திய மாணவர்களுக்காக புதிய திட்டத்தை அறிவித்துள்ள பிரான்ஸ்

பிரான்ஸ் அரசு இந்திய மாணவர்களுக்கு புதிய கல்வி வாய்ப்புகளை வழங்கும் நோக்குடன், 2030ம் ஆண்டுக்குள் 30,000 மாணவர்களை வரவேற்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
தற்போது 2023-24 கல்வியாண்டில் 8,000 இந்திய மாணவர்கள் ஃப்ரான்ஸில் பயிலும் நிலையில், இது பெரும் உயர்வாகும். இந்த திட்டம் இந்தியா-பிரான்ஸ் மூலதன ஒத்துழைப்பு கருதப்படும் முக்கியமான பாகமாக உள்ளது.
Classes internationales எனப்படும் ஒரு வருட கல்வி திட்டம் 35 ஃப்ரென்ச் பல்கலைக்கழகங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இது இந்திய பள்ளி மாணவர்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் பிரெஞ்சு மொழிக்கான தீவிர பயிற்சி மற்றும் தேர்ந்தெடுத்த பாடத்துறையில் அடிப்படை பாடங்கள் இடம்பெறும்.
இந்த வகுப்புகள் மற்ற எந்த வெளிநாட்டு மாணவர்களுக்கும் வழங்கப்படாமல், இந்திய மாணவர்களுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



