இன்றைய ராசிபலன் (15.05.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

மேஷம்:
அசுவினி: மதியம் வரை சந்திராஷ்டமம்
இருப்பதால் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நன்மையாகும்.பரணி: உங்கள்
எதிர்பார்ப்பு இழுபறியாகும். பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடிகள்
தோன்றும். கார்த்திகை 1: தடைபட்ட வேலை மதியத்திற்கு மேல் முடிவிற்கு வரும்.
மனதில் இருந்த குழப்பம் விலகும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4:
முயற்சி வெற்றியாகும் நாள். மதியம் வரை உங்கள் வேலைகள் தடையின்றி நடக்கும்.
ரோகிணி: திட்டமிட்டு செயல்படுவது அவசியம். கொடுக்கல் வாங்கலில் நெருக்கடி
உண்டாகும். மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு
வரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.
மிதுனம்:
மிருகசீரிடம்
3,4: செல்வாக்கு உயரும் நாள். நம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம்
காண்பீர். திருவாதிரை: இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.
வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும். புனர்பூசம் 1,2,3: தொழிலில் ஏற்பட்ட
தடைகள் விலகும். உடல்நிலை சீராகும்.
கடகம்:
புனர்பூசம் 4:
உழைப்பால் உயர்வு காணும் நாள். பண வரவில் ஏற்பட்ட தடைகள் விலகும். பூசம்:
விவேகத்துடன் செயல்பட்டு வெற்றியடைவீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள்
செல்வாக்கு உயரும். ஆயில்யம்: உறவினர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர்.
அனைத்திலும் நிதானமுடன் செயல்படுவது நன்மையாகும்.
சிம்மம்:
மகம்:
உங்கள் எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகும். தொழிலில் புதிய தொடர்புகள்
கிடைத்து லாபம் ஏற்படும். பூரம்: உழைப்பு அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும்
என்றாலும் எடுத்த வேலைகள் நடந்தேறும். உத்திரம் 1: இழுபறியாக இருந்த
வேலைகள் முடிவிற்கு வரும். நட்பு வட்டம் விரிவடையும்.
கன்னி:
உத்திரம்
2,3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். உறவினரால் அனுகூலம்
உண்டாகும்.அஸ்தம்: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். சித்திரை 1,2: தடைபட்ட வேலைகள்
நடந்தேறும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.
துலாம்:
சித்திரை
3,4: வருமானத்தால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம்
உண்டாகும்.சுவாதி: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பணிபுரியும் இடத்தில்
உங்கள் செல்வாக்கு உயரும். விசாகம் 1,2,3: தடைகள் விலகும். வியாபாரத்தில்
இருந்த போட்டியாளர்கள் இடம் மாறுவர்.
விருச்சிகம்:
விசாகம் 4:
நன்மையான நாள். உங்களை விட்டு விலகிச்சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும்
உங்களைத்தேடி வருவர். அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.
எதிர்பார்த்த பணம் வரும். கேட்டை: மனதில் இருந்த குழப்பம் விலகும்.
திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.
தனுசு:
மூலம்: வரவு
செலவில் கவனமாக இருக்கவும். மதியம் வரை நெருக்கடியும் குழப்பமும்
இருக்கும். பூராடம்: சிலர் உங்களை சீண்டிப்பார்க்க முயற்சிப்பர். எந்த
நிலையிலும் அமைதியை இழக்க வேண்டாம். உத்திராடம் 1: நினைத்த வேலைகளை
நினைத்தபடி நடத்தி முடிப்பீர். வரவேண்டிய பணம் வரும்.
மகரம்:
உத்திராடம்
2,3,4: ஆதாயமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
திருவோணம்: உங்கள் எதிர்பார்ப்பு மதியம் வரை பூர்த்தியாகும். அதன்பின்
அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். அவிட்டம் 1,2: உங்கள் வேலைகள் எளிதாக
நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும்.
கும்பம்:
அவிட்டம் 3,4:
நினைத்தது நிறைவேறும் நாள். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும்.சதயம்:
பணியிட பிரச்னை முடிவிற்கு வரும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த ஆதாயம்
உண்டாகும். பூரட்டாதி 1,2,3: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். நெருக்கடி
விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.
மீனம்:
பூரட்டாதி 4:
நன்மையான நாள். பெரியோர் உதவியால் உங்கள் முயற்சி வெற்றியாகும்.
உத்திரட்டாதி: நீண்ட நாளாக தள்ளிப்போன வேலை நிறைவேறும். குடும்பத்தில்
தோன்றிய சங்கடம் நீங்கும்.ரேவதி: மனதில் இருந்த குழப்பம் விலகும்.
வியாபாரத்தை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர்கள்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



