5 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை படைத்த பாக்கு வெத்தல பாடல்

இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான திரைப்படம் தாராள பிரபு.
இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கதை ரீதியாகவும் பாடல்களாலும் கவனம் பெற்றது. முக்கியமாக, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த, 'பாக்கு வெத்தலை மாத்தி முடிச்சு' பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
உலகளவில் கேட்கப்பட்ட இந்தப் பாடலை அதிக முறை ரீல்ஸ் விடியோவாகவும் மாற்றினர். .திருமண நிகழ்வுகளில் இப்பாடல் கட்டாயம் இடம்பெற்றுவிடும் என்கிற அளவிற்கு கேட்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இப்பாடல் யூடியூபில் இதுவரை 20 கோடி பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.
அனிருத் கொடுத்த ஹிட் பாடல்களில் முக்கியமான இடத்தை இப்பாடலும் பெற்றுள்ளது. 'தாராள பிரபு' படத்துக்கு 8 இசையமைப்பாளர்கள் இசையமைத்திருப்பது, இதுவே முதல்முறை.
அனிருத், ஷான் ரோல்டன், விவேக்-மெர்வின், இந்நோ கெங்கா, மேட்லி ப்ளூஸ், கேபர் வாசுகி, தி பேன்ட் ஊர்க்கா, பரத் சங்கர். இந்த 8 இசையமைப்பாளர்களும் ஆளுக்கொரு பாட்டுக்கு இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விந்தணுதான விழிப்புணர்வை மையமாக வைத்து 'தாராள பிரபு' படத்தின் கதையை கலகலப்பாக நகர்த்தியிருப்பார் இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



