கொழும்பில் பல கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் கைதான லண்டன் பெண்

#SriLanka #Arrest #Women #people #drugs #Lanka4
Prasu
6 hours ago
கொழும்பில் பல கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் கைதான லண்டன் பெண்

பிரித்தானியாவின் முன்னாள் விமான ஊழியர் ஒருவர் சுமார் ரூ 17 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பதுக்கி இலங்கைக்கு கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவரது புகைப்படம் உள்ளிட்ட முழு பின்னணியும் வெளியாகியுள்ளது.

விமான நிலையத்தில் கைது தெற்கு லண்டனைச் சேர்ந்த 21 வயது Charlotte May Lee என்பவர் திங்களன்று பாங்காக்கிலிருந்து கொழும்பில் வந்திறங்கிய பின்னர், விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

வெளியான தரவுகளின் அடிப்படையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தாய்லாந்திலிருந்து கொழும்பு வந்திறங்கிய மே லீயிடம் இருந்து 1.5 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான 46 கிலோகிராம் குஷ் என்கிற ஒரு கஞ்சா வகையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் கொழும்பு சர்வதேச மையம் திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய அளவிலான குஷ் பறிமுதல் இதுவாகும் என்றே கூறப்படுகிறது.

வெளிவிவகார அலுவலகம் விசாரணைக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து வெளியான தகவல்களின் அடிப்படையில், பறிமுதல் செய்யப்பட்ட போதைமருந்தானது இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 460 மில்லியன் என்றே கூறப்படுகிறது.

மேலும், உள்ளூரில் பிரபலமான நபர்களுக்காக இது கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் நம்ப்படுகிறது. மே லீ கைது செய்யப்பட்டு, அவர் மீதான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, இலங்கையில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய பெண்ணுக்கு ஆதரவளிக்க இருப்பதாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1747588759.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!